சூட்டிங் முடிந்ததும் அடித்து ஆட ஆரம்பித்த விஜய்.. தவெகவிற்கு அடுத்தடுத்த நிர்வாகிகள் நியமனம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 7 ஆம் கட்டமாக 6 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ள விஜய், புதிய நிர்வாகிகளுக்கு தவெகவினர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று களம் இறங்கியிருக்கிறார். மேலும் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்றும் ஜனநாயகன் படம் தான் கடைசி படம் என்றும் அறிவித்து இருந்தார்.

ஜனநாயகன் பட சூட்டிங்கில் இருந்து வரும் விஜய், சூட்டிங் முடிந்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்து இருந்தார். இதன்படி ஜனநாயகன் படத்தில் விஜய்க்கான சூட்டிங் முடிந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து கட்சி பணிகளை விஜய் செய்து வருகிறார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
7 ஆம் கட்டமாக 6 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ள விஜய், புதிய நிர்வாகிகளுக்கு தவெகவினர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications