பாகிஸ்தானுக்கு நான் ஆதரவா? என் பதிவு தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு! விஜய் ஆண்டனி மறுபதிவு
சென்னை: என் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என காஷ்மீர் பஹல்காம் குறித்து தான் போட்ட போஸ்டிற்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு, காஷ்மீரில் நடந்த கொடும் படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம். இவ்வாறு விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.
— vijayantony (@vijayantony) April 28, 2025
நேற்றைய தினம் அவர் வெளியிட்டிருந்த பதிவில் காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி பலர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதற்குதான் விஜய் ஆண்டனி மறு பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்கு பலர் சுற்றுலா சென்றனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் மக்கள் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுக்கிறார்கள். அந்த வகையில்தான் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் என குட்டி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காம் சென்றனர்.
கடந்த 22 ஆம் தேதி பஹல்காமின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த போது பயங்கரவாத தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தியாவைச் சேர்ந்த 25 பேரும் நேபாள நாட்டவர் ஒருவரும் என 26 பேர் பலியாகிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலடியாக இந்திய அரசு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் , விவசாயம் பாதிக்கும், நீர் மின் நிலையங்களுக்கு தண்ணீர் இல்லாமல் மின்சார பற்றாக்குறையும் ஏற்படும். அது போல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications