Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார். இதில் நடிகை ஒருவர் மீது சங்கீதா கடுமையான புகார்களை கொடுத்திருந்த நிலையில்தான்.. நேற்று நடிகர் விஜய் திரிஷா உடன் கல்பாத்தி வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தார். இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

"எந்தத் தளபதிக்காகச் சண்டை போட்டோமோ, அவரே இப்படிச் செய்துவிட்டாரே!" என எக்ஸ் (X) தளம் முதல் இன்ஸ்டாகிராம் வரை விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள். சங்கீதா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வலம் வந்ததை 'வெட்கக்கேடானது' (Shameful) எனப் பதிவிட்டு வருகிறார்கள்.

"ஆறுதலுக்குக் கூட மனைவி பக்கம் நிற்காமல், இப்படிப் பகிரங்கமாகத் திரிஷாவுடன் 'ட்வின்னிங்' உடையில் வலம் வருவது நாங்கள் நேசித்த விஜய்க்கு அழகல்ல" என்றும், "குடும்பத்தையும் இழந்து, இப்போது நற்பெயரையும் விஜய் இழந்து வருகிறார்" என்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை 'லெஃப்ட் அண்ட் ரைட்' எனத் தீர்த்துக்கட்டுகிறார்கள். குறிப்பாக, விஜய்யின் மகன் சஞ்சய் அவரை சமூக வலைதளங்களில் 'அன்ஃபாலோ' (Unfollow) செய்துள்ளதாக வரும் செய்திகள், வெறித்தனமான ரசிகர்களைக் கூட இன்று விஜய்க்கு எதிராகக் கேள்வி கேட்க வைத்துள்ளது.

Vijay appeared together with Trisha The people of chruches are very much angry with him

விஜய் ரசிகர் செய்துள்ள போஸ்ட்

இந்த நிலையில்தான் விஜய் ரசிகர் செய்துள்ள போஸ்டில், நா போற சர்ச்க்கு கொறஞ்சது 3000 பேர் வர்றங்கா அதுல 1000 பேர் கிட்ட சொல்லி வச்சிருந்தேன் இந்த தடவ நம்ம விஜய் அண்ணாக்கு ஒட்டு போடாலாம். அவரும் நம்மள மாதிரி கிறிஸ்டியன் தான். நாம தான் அவருக்கு சப்போர்ட் பண்ணனும் ன்னு அவங்களும் சரி உனக்காக போடுறேன்ன்னு சொன்னாங்க. இவ்ளோ நாள் அவங்க dmk க்கு ஒட்டு போட்டுட்டு இருந்தவங்க. இப்போ தூங்கி எழும்பி பாத்த 23 missed call ரொம்ப முக்கியமான ஒருத்தர் போன் மட்டும் அட்டென்ட் பண்ணுனேன்.

அவருக்கு ஒரு 53 வயசு இருக்கும். முதல் வார்த்தையே உங்க ஆளு என்னய்யா இவ்ளோ சீப்பா இருக்காரு இவருக்கா ஒட்டு போட சொல்லி எங்க கிட்ட பேசுன தயவு செஞ்சு இனிமேல் சர்ச்ல பேசதாப்பான்னு சொல்லிட்டு அவரே கட் பண்ணிட்டாரு. ஹலோங்குற ஒரு வார்த்தை மட்டும் தான் நா பேசுனேன். தனக்கு தோணுறத பண்ணுறவன் தலைவன் இல்லன்னா தான் எடுக்குற முடிவு மத்தவங்கள பாதிக்குதான்னு சிந்திச்சு முடிவு எடுக்குறவன் தான் ஒரு தலைவன், என்று கூறி உள்ளார்.

விஜய் செயல்

நேற்று நடிகர் விஜய் திரிஷா உடன் கல்பாத்தி வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தார். முக்கியமாக விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது, என்று கூறி இருந்தார்.

நேற்று விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக பங்கேற்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்திற்கு விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக ஒரே காரில் வந்துள்ளனர். மேலும் மேடையில் ஒன்றாகவே போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் ஒரே வண்ணத்தில் இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+