பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்?
சென்னை: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பாக திலகபாமா போட்டியிட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பாக ஆர்டி சேகர் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் பாமக சார்பாக பலமான வேட்பாளராக பாமகவின் பொருளாளர் திலகபாமா களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரம்பூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. திமுக சார்பாக சிட்டிங் எம்எல்ஏ ஆர்டி சேகர் களமிறக்கப்பட்டுள்ளார். நகரமயமாக்கல் அதிமுகள்ள தொகுதி என்பதோடு, இளம் வாக்காளர்களும், சிறுபான்மை மற்றும் தலித் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும்.

கடந்த முறை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் அதிமுக சார்பாக போட்டியிட்ட தனபாலன் சுமார் 50 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். கடந்த தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அதிமுக தரப்பு இம்முறை பெரம்பூர் தொகுதியை பாமக பக்கம் தள்ளிவிட்டது.
பெரம்பூர் தொகுதியில் தலித் சமூக மக்கள் அதிகம் இருப்பதை அறிந்தும் பாமகவுக்கு இந்த தொகுதியை அதிமுக தள்ளிவிட்டதால், அதிமுக - தவெக இடையில் அண்டர் டீலிங் இருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா களமிறங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திலகபாமா நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்த அவர், மதுரையில் படித்து பின்னர் சிவகாசியில் வசித்து வருகிறார். விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியை கைப்பற்ற காய் நகர்த்தி வந்தார். ஆனால் பெரம்பூர் தொகுதியில் வன்னியர்கள் போட்டியிட்டால், விஜய்க்கு எளிதாக விட்டுக் கொடுத்ததை போல் இருக்கும். இதனால் திலகபாமாவை அன்புமணி டிக் அடித்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ஆத்தூர் தொகுதியில் திமுகவின் ஐ.பெரியசாமியை எதிர்த்து திலகபாமாவை பாமக கோர்த்துவிட்டது. இந்த தேர்தலில் ஐ.பெரியசாமி சுமார் 1.54 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திலகபாமாவால் 30 ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியவில்லை. டெபாசிட் தொகையையே இழக்க நேரிட்டது. இப்படியான சூழலில் மீண்டும் பரீட்சயம் அல்லாத தொகுதியில் திலகபாமாவை பாமக கோர்த்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications