"கால் வலிக்குதாப்பா?" முதலீட்டாளர்கள் மாநாட்டில் கேமராமேன்களிடம் அன்பு காட்டிய முதல்வர் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், நீண்ட நேரம் நின்று படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன்களை பார்த்து நலம் விசாரித்ததுடன் "கால் வலிக்குதாப்பா" என பாசத்துடன் கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கிண்டி தனியார் ஹோட்டலில் "வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு" நேற்று நடைபெற்றது.

Vijay

இதில் ஏராளமான தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். 1 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் நடந்த இந்த மாநாடு வெற்றி தமிழ்நாடு என்ற பெயரில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 17ஆவது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் 12 ஆவது முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.

அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் தவெக அரசு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்களை கடந்த நிலையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.

இந்த மாநாட்டில் 97 நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழகத்திற்கு ரூ 67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படவுள்ளன. இதனால் 1,06,998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ஏற்கெனவே கடந்த 3 மாதங்களில் போடப்பட்ட தொழில் முதலீடுகளையும் சேர்த்து தவெக அரசு பதவியேற்ற 90-க்கும் மேற்பட்ட நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

தொடர்ந்து ரூ 4.4 கோடியில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ 2,676 கோடியில் 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

ரூ 777.74 கோடியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தும், 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வான 20 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதன் மூலம் ரூ 1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழகத்தில் எந்தெந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.

அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் 1400 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஜப்பானை சேர்ந்த ஒய்கேகே என்ற நிறுவனம் ரூ 1651 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 4316 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஆவிட் குழுமம் ரூ 7000 கோடியும் போடரான் ஃபுட்ஸ் 185 கோடியும், எல் அன்ட் டி ரூ 2500 கோடியும், விக்ரம் சோலார் ரூ 1300 கோடியும், சுஜ்லான் ரூ 500 கோடியும் என்டிஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரூ 200 கோடியும் டிஏபிபி ஸ்நாக்ஸ் ரூ 220 கோடியும் ஷைலி இன்ஜீனியரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் ரூ 500 கோடியும் முதலீடு செய்துள்ளது.

முதலீட்டாளர்கள் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விஜய்க்கு முதலீட்டாளர்கள் நினைவுப் பரிசையும் வழங்கினர்.

இந்த மாநாட்டு நிகழ்வுகளை காலை முதலே அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென முதல்வர் விஜய் மேடையில் இருந்தபடியே அவர்களை பார்த்து "கால் வலிக்குதாப்பா" என அன்பாக கேட்டதில் புகைப்படக் கலைஞர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+