விஜய் பதிலுரை.. திமுகவுக்கு செக் வைக்குமா அந்த ஃபைல்கள்? இன்று நடக்க போகும் பெரிய மாற்றம் இதுதான்
சென்னை: முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்க உள்ளார்.. தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று திங்கட்கிழமை சட்டப்பேரவையில் நேரடியாக பதில் அளிப்பதாக முதலமைச்சர் விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள நிகழ்வுகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மாற்றம் என்பதை இங்கே பார்ப்போம்..!!!
ஆளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வரும் நிலையில், அவற்றுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்க உள்ளார்.

விஜய் பதிலுரை
சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாகவே அரசு நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, அரசு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்த சூழலில், இன்று சட்டப்பேரவை தொடங்கியதும் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் முதலில் பதிலுரை வழங்க உள்ளார்.
திமுக வெளிநடப்பு?
முதல்வரின் பதிலுரை முடிந்த பிறகே கேள்வி நேரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சட்டப்பேரவை அலுவல்கள் வழக்கத்தைவிட நீண்ட நேரம் நடைபெற வாய்ப்புள்ளது.
முதல்வர் தனது பதிலுரையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறார் என்பதுதான் இன்றைய முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பேசப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஏதாவது புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கும் முதலமைச்சர் இன்று பதில் அளிக்க உள்ளார்.
ஃபைல்கள் இருக்கிறதா?
மேலும், முதல்வரின் கையில் சில முக்கியமான சர்ச்சைக்குரிய ஃபைல்கள் இருக்கிறதா? அந்த ஃபைல்களை சட்டப்பேரவையில் எடுத்துக் காட்டி எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்பான முக்கிய தகவல்கள் ஏதேனும் அவரது பதிலுரையில் வெளியாகுமா என்பதும் கவனிக்கப்படுகிறது.
முதல்வரின் பதிலுரைக்குப் பிறகு வனத்துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் பதிலுரை வழங்க உள்ளனர்.
அதனால் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பதிலுரைதான் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் என்ன பதில் சொல்கிறார், ஏதாவது புதிய அறிவிப்புகள் வெளியாகிறதா, முக்கிய கோப்புகள் குறித்து ஏதேனும் தகவல் வெளிவருகிறதா என்பதற்கு இன்று காலை விடை கிடைக்கும்....!!


Click it and Unblock the Notifications
