Misa: சட்டசபையில் விஜய் தாடையில் கை வைத்த சைகை! தவெக ஆர்டர் கொடுத்த விநாயகர் சிலை வைக்க தடை
சென்னை: சட்டசபையில் முதலமைச்சர் விஜய் காட்டிய சைகையை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரி க்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் காட்டிய சைகையை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஒன்று கொடுங்கலூர் அகஸ்தியர் தெருவில் தயாரிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.
இந்த சிலையை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,பாரத் இந்து முண்ணனி மாநில இளைஞர் அணி துணை செயலாளராரும் சமூக ஆர்வலருமான ஆர். டி. ஐ. செல்வம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அதில் சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகர், அகத்தியர் தெருவில் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தாடையை நோக்கி கையைக் காட்டுவது போல் விநாயகர் சிலைகளை செய்து வைத்துள்ளார்கள் . இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்றும் அதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதை கேலி செய்யும் வகையிலான விநாயகர் சிலை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் உள்ள தவெக வடசென்னை மாவட்டத் தலைவர் சுறா வேலு தலைமையில் அந்த பகுதியில் இந்த சிலையை வைக்க ஆர்டர் கொடுத்துள்ளார்களாம்.
அந்த சிலையை வைக்கக் கூடாது என்றும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், மீறி வைத்தால் அந்தந்த இடத்தில் பாரத் இந்து முன்னணி சார்பாக போராட்டம் நடத்துவதாகவும் கூறி சிலைக்கு தடை கோரினார். இதனையடுத்து தற்போது சிலையை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சிலை தயாரித்தவர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது விஜய் ஒரு மணி நேரமாக ஆவேசமாக பேசியிருந்தார்.
மிசா குறித்து பேசும் போது சிறையில் ஸ்டாலினை போலீஸ் அடித்ததில் தாடை உடைந்தது குறித்து செய்கை காட்டினார். இது திமுகவினருக்கு மட்டுமல்ல, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி கட்சியினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தான் யாரையும் கிண்டல் செய்யும் நோக்கி திட்டமிட்டு அந்த உடல்மொழியை செய்யவில்லை என விஜய் விளக்கம் அளித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
