இந்த முறை குட்டீஸிடம் வாக்கு கேட்காத விஜய்.. மதுராந்தகம் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா? என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் மதுராந்தகம் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்த நிலையில், அவரது பேச்சில் வழக்கமான ஒரு விஷயம் மிஸ்ஸாகியிருந்தது. அதாவது பொது தேர்தல் சமயத்தில் விஜய் எப்போதும் குட்டீஸ் என தனியாக சொல்லி பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால், இந்த முறை குட்டீஸ் என்றோ அல்லது குழந்தைகளிடமோ நேரடியாக வாக்கு கேட்பது போல பேசுவதை விஜய் தவிர்த்திருந்தார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மரகதம் குமரவேல். இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மாதங்களிலேயே இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Vijay

விஜய் பிரச்சாரம்

இதற்கிடையே மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்வர் விஜய் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கே பேசிய அவர், "திமுகவின் கிளை கழகமாகவே அதிமுக மாறிவிட்டது. ஊழல் என்று சட்டசபையில் பேசினால், உடனே கோபம் வந்துவிடும். ஊழல் என்ற உடன் ஆதாரத்தை கேட்கிறது திமுக.. என்னை சட்டசபையில் பேச விடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம். 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஊழல் பற்றியெல்லாம் விஜய் பேசுகிறானே என்று அவதூறாக பேசுகிறார்கள்" என்று பேசியிருந்தார். மேலும், விசில் சின்னத்திற்கு வாக்களிக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.

குட்டீஸ்

விஜய்யின் இந்த பிரச்சாரத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்கலாம். அதாவது கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் விஜய் எப்போதும் குழந்தைகளை நோக்கி தனியாக பேசுவார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, குழந்தைகள் தங்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் தவெகவுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று விஜய் பேசியிருந்தார். இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் டிரெண்டானது. குழந்தைகள் சொன்னதை கேட்டு பலரும் வாக்களித்தாக கூட சொன்னார்கள்.

சர்ச்சை

விஜய்யின் இந்த அணுகுமுறை அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் குழந்தைகளைப் பயன்படுத்த கூடாது. பேரணி, முழக்கமிடுதல், பிரசார பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் விதியாகும். இந்த விதிகளை மீறும் வகையில் குழந்தைகளை உணர்வுப்பூர்வமாகத் தூண்டி, அவர்களது குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுக்க செய்ததாக கூறி விஜய்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை

குழந்தைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது தொடர்பான இன்னொரு வழக்கில் விஜய் தரப்பு பதிலளித்திருந்தது. அதில் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை என மறுத்துள்ளது. மேலும், அத்தகைய விதிமீறல் நடந்ததாக வைத்து கொண்டாலும், அது மட்டும் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாகாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு இருந்தது. இந்த வழக்கு இப்போதும் விசாரணையில் உள்ளது.

தவிர்த்தார் விஜய்

இது தவிர தமிழக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், குழந்தைகளை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக டிஜிபியிடம் சட்ட நடவடிக்கை எடுக்க கோரியது. தேர்தல் ஆணையத்திற்கும் இதுதொடர்பாக நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

குழந்தைகள் தொடர்பான புகார்கள், நீதிமன்ற வழக்குகள் காரணமாகவே சர்ச்சைக்கு இடமளிக்காமல் இந்த முறை விஜய் தனது உரையில் "குட்டீஸ்" என தனிப்பட்ட முறையில் அழைத்து வாக்கு கேட்பதை தவிர்த்திருக்கிறார் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+