வாவ், வாழ்த்துக்கள் விஜய்! தமிழகத்தில் முதல் முறையாக ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ஏனெனில், தமிழகத்தில் முதல் முறையாக ஒரு சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சர் பதவிக்கு வருகிறார். இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து முதலமைச்சர்களும் பிறப்பால் இந்து மதத்தையம், மற்ற சமூகத்தையும் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

TVK Vijay vijay first minority chief minister tamil nadu joseph vijay cm oath today tamil nadu first christian cm tvk 108 seats plus allies nehru indoor stadium swearing in tamilaga vetri kazhagam historic moment vijay christian vellalar community h raja joseph vijay remark tamil nadu politics minority representation first non-hindu cm tamil nadu 120 mlas support tvk tamil nadu assembly 25 minority mlas voters ignore religion caste vijay tamil nadu new government 2026 landmark shift tamil nadu politics 108 120 25 2026

தவெக - பல கட்சி ஆதரவுடன் பெரும்பான்மை

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இந்த ஆதரவுகளின் உதவியுடன் தவெக மொத்தம் 120 எம்எல்ஏக்களின் பலத்தை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த அரசியல் நகர்வுகள் தமிழ்நாட்டில் புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன.

தமிழ்நாட்டின் முதல் சிறுபான்மை முதல்வர்

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு தனித்துவமான தருணம். 1949ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதவியேற்ற அனைத்து முதலமைச்சர்களும் பிறப்பால் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

காங்கிரஸ் காலத்தில் பி.எஸ். குமாரசாமி ராஜா, சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், எம். பக்தவத்சலம் ஆகியோர்; திராவிடக் கட்சி யுகத்தில் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி, முக. ஸ்டாலின் உள்ளிட்டோர் - அனைவரும் இந்து மத பின்னணியிலிருந்து வந்தவர்களே. மு. கருணாநிதி நாத்திகவாதியாக அறியப்பட்டாலும் அவர் பிறப்பால் இந்துவாகவே இருந்தார். இந்தப் பட்டியலில் இப்போது விஜய் முதல் சிறுபான்மை (கிறிஸ்தவர்) முதல்வராக இடம் பெறுகிறார்.

விஜயின் பின்னணி

விஜய் கிறிஸ்தவ வெள்ளாளர் சமூகத்தில் பிறந்தவர். அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். விஜய் தான் அனைத்து இந்து கோயில்களுக்கும் செல்லும் வழக்கம் கொண்டவர். இருப்பினும், பல இடங்களில் தனது முழுப் பெயரான 'ஜோசப் விஜய்' என்று அடையாளப்படுத்தியுள்ளார்.

பாஜக தலைவர் ஹெச்.ராஜா போன்றோர் அவரது மத அடையாளத்தைப் பற்றி பேசியபோதும், தமிழ்நாட்டு மக்கள் மதத்தைப் பார்க்காமல் ஓட்டுப் போட்டுள்ளனர். ஜாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம்

புதிய சட்டப்பேரவையில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். கடந்த அவையில் இந்த எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில், இம்முறை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

இந்த 25 பேரில் 13 பேர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் முக்கிய அம்சமாகும். தவெக கட்சித் தலைவர் விஜய், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மேரி வில்சன், ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த தாஹிரா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். கூட்டணி கட்சிகளிலும் சிறுபான்மையினர் கட்சிகளின் ஆதாரவு முக்கியமானதாக மாறியது.

மொத்தத்தில், 17வது தமிழக சட்டப்பேரவையில் எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்

விஜயின் பதவியேற்பு விழா தமிழ்நாட்டில் வெறும் அரசியல் மாற்றத்தை விட சமூக அரசியலில் புதிய அத்தியாயமாக பிரதிபலிக்கிறது. மக்கள் மதம் அல்லது ஜாதியைப் பார்க்காமல் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ள இந்தச் சூழல் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி செல்வதை காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+