விஜய்யுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித்ஷா சொன்ன பதில்! களநிலவரம் இதுதான்
சென்னை: விஜய்யுடன் பாஜக கூட்டணி வைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று பேச்சுக்கள் அடிப்பட்டு வரும் நிலையில், இது குறித்து நியூஸ் 18 செய்தி ஊடகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.
நியூஸ் 18 ஊடக குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அமித்ஷா அளித்த பேட்டியளித்திருந்தார். பேட்டியின்போது விஜய்யுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமித்ஷா,

"நாங்கள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுப்படுத்த விரும்புகிறோம். இது தொடர்பாக எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அது கூட்டணி கட்சிகளுடன் அமர்ந்து பேசிதான் எடுக்கப்படும்" என்று பதிலளித்தார். அப்படியெனில் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததை நீங்கள் மறுக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று நான் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வெற்றியை உறுதி செய்வோம்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்திருந்தார். குறிப்பாக லாலு பிரசாத் கட்சியில் நிலவும் வாரிசு அரசியல் குறித்து சாடியிருந்தார்.












Click it and Unblock the Notifications