Vijay Black Bindi: விஜய் நெற்றியில் கருப்பு பொட்டு ஏன்.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருக்கிறது. ஜோதிட ரீதியாக விஜய் பல சென்டிமென்ட்களை கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் வைக்கும் கருப்பு பொட்டின் பின்னணியில் கூட சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது. அது என்ன சென்டிமென்ட்.
சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு ஓயவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். விஜய்க்கு ஜோதிடம் மீது நம்பிக்கை உள்ளது. அவரின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிடரை, முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அது சர்ச்சையான பிறகு அந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளனர். விஜய் அரசியலில் அதிக சென்டிமென்ட்களை கடைபிடித்து வருகிறார்.

விஜய் கருப்பு நிற பொட்டு வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதை அரகஜா திலகம் என்பார்கள். ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தை நம்பும் பெரிய மனிதர்கள் தங்களின் வெற்றிக்காக அரகஜாவை பயன்படுத்துவார்கள். தெய்வீக மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் அரகஜாவுக்கு பயங்கர சக்தி இருப்பதாக பலர் நம்புகிறார்கள். சாதாரண நாட்டு மருந்துக்கடைகளில் கூட அரகஜா கிடைக்கும்.
அதை பயன்படுத்துவோர் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள், வெற்றிகள் கிடைக்கும். புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் ஆகியவற்றுடன் அரிய வகை மூலிகைகள், நறுமண பொருட்கள் மூலம் அரகஜா தயாரிக்கப்படுகிறது. பல அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் அரகஜா பொட்டு வைப்பார்கள். விஜய் ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவரும் அந்த சென்டிமென்டை பின்பற்றுகிறார்.
கைகளில் சிவப்பு நிற கயிர் கட்டுவது, வாக்குப்பதிவு முடிந்த பிறகு திருச்செந்தூர், சீரடி உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் சென்று சிறப்பு பூஜை செய்தது என விஜய்யின் ஆன்மிக விருப்பத்தை நாடே அறியும். அந்த வரிசையில் தற்போது அவர் நெற்றியில் வைக்கும் பொட்டிலும் ஜோதிட சென்டிமென்டை பின்பற்றுகிறார். தேர்தலுக்கு முன்பு விஜய் குங்கும பொட்டை தான் அதிகம் வைத்தாங்க. தேர்தலுக்கு பிறகு தன்னுடைய வெற்றியை தக்க வைப்பதற்காக அவர் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications