சூப்பர் பட்ஜெட்.. விஜய்க்கு பாராட்டு! பேரை மாத்தினால் என்ன? திட்டம் அப்படியே இருக்கே! திருமா பளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பட்ஜெட்டில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த அமைச்சராக உள்ள சமூக நீதித்துறைக்கு கடந்த காலங்களை விட இப்பொழுது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தற்போது பெயரை மட்டுமே மாற்றி அறிவித்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், அந்தத் திட்டங்கள் அப்படியே இருக்கிறது என்பதை வரவேற்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று மாநாடு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்." தமிழகத்தில் தமிழ் தேசியம் குறித்து விவாதத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிற இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி. சமீப காலமாக பிறமொழி வெறுப்பு, பிற இன வெறுப்பு என்கிற இனவாதம் தமிழகத்தில் தலை தூக்கி இருக்கிறது.

Thirumavalavan VCK Vijay

திருமாவளவன்

குறிப்பாக தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் பிறமொழி பேசும் மக்களையும் தள்ளி வைக்கிற.. அவர்கள் மீது வெறுப்பை உமிழ்கிற விவாதங்களை பலர் அரங்கேற்றி வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சி பார்வையில் அன்னை தமிழைக் காப்போம் அனைத்து மொழிகளையும் மதிப்போம் என்கிற அடிப்படையில் தான் தமிழைப் போற்றுகிறோம். தமிழ் தேசிய உரிமைகளை வென்றெடுக்க போராடுகிறோம். தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை தமிழரசன் முன் வைத்தார்.

தமிழீழ கோரிக்கை

தமிழ் தமிழீழ கோரிக்கையை பிரபாகரன் முன்னெடுத்தார். தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு தனிக்கொடி உலக அரங்கில் அங்கீகார வேண்டும் என்கிற வேட்கை நெடுங்காலமாக இருக்கிறது. 10 கோடிக்கும் மேலான தமிழர்கள் உலகமெங்கும் தமிழ்நாடு உள்பட வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஐநா பேரவையில் நமக்கு ஒரு அங்கீகாரம் இல்லை. நம்முடைய கொடி அங்கே பறக்கவில்லை. நம்முடைய இனத்தின் பாதுகாப்புக்கான குரல் ஒலிக்கவில்லை என்கிற நிலை உள்ளது.

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த அமைச்சராக உள்ள சமூக நீதித்துறைக்கு கடந்த காலங்களை விட இப்பொழுது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அயல்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வித் உதவிதொகை உயர்த்தப்பட்டு பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அயோத்திதாசர் பண்டிதர் வீடு கட்டும் திட்டத்திற்கு அதே பெயரில் நீடிக்கிறது.

திமுக ஆட்சி

நிதி ஒதுக்கிடும் கூடுதலாக செய்யப்பட்டிருக்கிறது. எளிய மக்களை பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்த கல்வி ரீதியாகவும் மேம்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காக முதலமைச்சருக்கு நிதி அமைச்சருக்கும் பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தற்போது பெயரை மட்டுமே மாற்றி அறிவித்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு

கலைஞர் வீடு கட்டும் திட்டத்திற்கு வெற்றி வீடு கட்டும் திட்டம் என பெயர் மாற்றம் செய்திருப்பதாக அறிகிறேன். அதுபோல பல திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது தெரிய வருகிறது. இது வழக்கமான ஒன்றுதான். அந்தத் திட்டம் அப்படியே இருக்கிறது என்பதில் வரவேற்கிறோம் பாராட்டுகிறோம். எல்லா திட்டங்களையும் செம்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்ய இருக்கிறது இந்த அரசு.

வேளாண் பட்ஜெட்

நாளை தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி இருக்கிறது. அதில் சில நிபந்தனைகள் அடிப்படையில் முதலமைச்சர் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தார். அந்த நிபந்தனைகள் எல்லாம் தளர்த்திவிட்டு முழுமையாக அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

பயிர்க் கடன் தள்ளுபடி

குறு விவசாயி, சிறு விவசாயி ஆகிய தரப்பினர் பயன் பெறக்கூடிய வகையிலாவது கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி நீர் பிரச்சனை பொறுத்தவரையில் புதிதாக அணை கட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. பெங்களூரில் வசிக்கக்கூடிய மக்கள் சரிபாதி அளவுக்கு தமிழர்கள் உள்ளார்கள். அங்க வாழக்கூடிய மக்களுக்கு தான் குடிநீர் அங்குள்ள தமிழர்களுக்கும் ஆணை குடிநீர்தான் அது இந்த குடிநீர் திட்டம். ஆனால் அவர்களுக்கு தேவை எவ்வளவோ அந்த நீரை கேஆர்எஸ் என்கிற கிருஷ்ணா ராஜசாகர் அணையின் மூலம் எடுத்துக் கொள்ள முடியும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+