Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் புஸ்சி ஆனந்தும் நடிச்சிருக்காரா? என்ன கேரக்டராம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: (விஜய்யின் ஜனநாயகன் படத்தில் புஸ்சி ஆனந்த்: Pussy Anand in Vijay's Jannayakan) நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் "ஜனநாயகன்" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில், தவெக பொதுச்செயலாளரான புஸ்சி ஆனந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் அந்த படத்தில் என்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்று தகவலும் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி கட்சி பணிகளை செய்து வருகிறார். கட்சி தொடங்கிய பிறகு அதாவது அரசியலுக்கு வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறிய விஜய், ஜனநாயகன் படம் தான் கடைசி படம் என்று கூறினார்.

vijay-bussy-anand-s-possible-cameo-in-jana-nayagan-creates-buzz

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்

ஜனநாயகன் படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறியிருந்தார். அதன்படி தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் விஜய் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டுளது. இதர பணிகள் நடந்து வரும் நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் அன்று ஜனநாயகன் படத்தின் சிறிய அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கி பிரபலமான ஹெச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார். தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களும் பெரிய ஹிட் அடித்தது. ஜனநாயகன் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இது போக பிரேமலு படத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ, பிரியாமணி, பிகில் படத்தில் நடித்துள்ள ரெபோ மோனிகா, வரலட்சுமி சரத்குமார், சுருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

புஸ்சி ஆனந்த் நடிக்கிறார்

நடிகர்களை பொறுத்தவரை பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தில், புஸ்சி ஆனந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்சி ஆனந்த் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. புஸ்சி ஆனந்த் ஒரு காட்சியில் போராட்டக்காரராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத்தும் நடிக்கிறார்

எனினும் இதுபற்றி படக்குழு தரப்பிலோ.. புஸ்சி ஆனந்த் தரப்பிலோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இசைமையைப்பாளர் அனிருத்தும் சிறப்பு தோற்றத்தில் ஜனநாயகன் படத்தில் வருவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் விஜய்யின் கத்தி, மாஸ்டர், லியோ படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது ஜனநாயகன் படத்திலும் அவர் இசையமைத்து உள்ளார்.

முன்பு கூட இதேபோன்று பிகில் படத்தில் சிங்கப்பெண் பாடலில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமார் சிறிய தோற்றத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை குஷ்புவும், போக்கிரி படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவும் சிறப்பு தோற்றத்தில் விஜய்யுடன் நடனம் ஆடி இருப்பர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+