2 முக்குலத்தோர், 2 கொங்கு கவுண்டர்! ஒரு வன்னியர் கூட இல்லை! விஜய் அமைச்சரவையில் முதன்முறையாக பிராமணர்
சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தவெக தலைவர் விஜய்யின் முதல் அமைச்சரவை தற்போது பதவியேற்றிருக்கிறது. தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில், அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவைலில் 2 முக்குத்தோர், 2 கொங்கு கவுண்டர், முதன்முறையாக ஒரு பிராமணர் பதவியேற்றுள்ள நிலையில், ஒரு வன்னிய ர்கூட இடம் பெறவில்லை.
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் செங்கோட்டையன், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, அருண்ராஜ், சிவகாசி கீர்த்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, தமிழக அமைச்சரவை வரலாற்றில் அரிதாக பார்க்கப்படும் வகையில் பிராமண சமூகத்தை சேர்ந்த வெங்கடரமணனுக்கு அமைச்சரவை இடம் வழங்கப்பட்டிருப்பதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக திராவிட அரசியலில் பிராமண சமூக பிரதிநிதித்துவம் குறைந்து காணப்பட்ட நிலையில், விஜய் அமைச்சரவையில் அதற்கு இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த அமைச்சரவையில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகிய இருவரும் கொங்கு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மேற்கு தமிழகத்தில் தவெக பெற்ற வாக்குகளுக்காக இந்த பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தென்மாவட்ட அரசியலில் செல்வாக்கு கொண்ட முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நிர்மல் குமார் மற்றும் டிகே பிரபு ஆகியோருக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரெட்டியார் சமூகத்தை
ஆதவ் அர்ஜுனாவுக்கு அமைச்சரவை இடம் வழங்கப்பட்டிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. கட்சி ஆரம்பித்ததிலிருதே விஜய்யுடன் நெருக்கமாக செயல்பட்ட அவர், கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அமைச்சரவை இடம் கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராஜ்மோகனுக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சிவகாசி கீர்த்தனா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
அதே நேரத்தில், வடதமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட முதற்கட்ட பட்டியலில், இடம்பெறாதது அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த தேர்தலில் 10க்கும்மேற்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், வன்னியர் சமூகத்திற்கு அமைச்சரவை இடம் வழங்கப்படாதது வடதமிழக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் அடுத்தகட்ட பட்டியலில் அனைத்து சமூகத்தினருக்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம்











Click it and Unblock the Notifications