சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார்
சென்னை: ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்யாமல் வீடு திரும்பியுள்ளார் விஜய்.. இன்று மொத்தம் 4 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு வீடு திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வில்லிவாக்கம், அண்ணா நகரில் அடுத்தடுத்து இன்று பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் அதனை விஜய் ரத்து செய்துள்ளார். இதனால் விஜய்யின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதல் நாளிலேயே இரண்டு இடங்களில் விஜய்யால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தவெகவினர் தெர்வித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சென்னையில் 4 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். தான் போட்டியிடும் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருந்தார். முதலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், தொடர்ந்து பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அப்போது அங்கு மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதையடுத்து விஜய்யும் 4 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார். அடுத்ததாக ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் திடீரென வில்லிவாக்கம் பரப்புரையை விஜய் ரத்து செய்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தவெக நிர்வாகி பூக்கடை குமாரும் விஜய்யின் வில்லிவாக்கம் பிரச்சாரம் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் வேறொரு நாளில் விஜய் இங்கு பிரச்சாரம் செய்வார் என்றும் வருத்தம் தெரிவித்தார். இதேபோல் அண்ணா நகரிலும் இன்று விஜய் பிரச்சாரம்செய்ய மாட்டார் என தவெகவினர் தெரிவித்துள்ளனர்.
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
டெல்லியை நோக்கிப் பாயும் தவெக-வின் முதல் 'அம்பு'.. ராஜ்யசபா எம்.பி.. விஜய்யின் சாய்ஸ் யார்? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்!











Click it and Unblock the Notifications