C Voter: விஜய்யால் ஜெயிக்க முடியாது.. பிரசாந்த் கிஷோர் கதிதான்! சி வோட்டர் யஷ்வந்த் தேஷ்முக் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யால் வெற்றி பெற முடியாது.. தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி வெற்றி பெறாது.. பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என சி வோட்டர் யஷ்வந்த் தேஷ்முக் கணித்துள்ளார். மேலும் அதிமுகவோடு விஜய் கூட்டணி அமைத்தால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு சற்றேறக்குறைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை வலுவான மூன்றாவது அணியாக விஜய் களம் காண்கிறார்.

Vijay Cannot Win Contests Alone He May Face Prashant Kishor Fate predicts C voter Yashwant Deshmukh

விஜய்யை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர

ஆளும் திமுக கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக - பாஜக கூட்டணிக்கு, விஜய்யின் தவெக கடும் சவால் அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பே பலமுறை மூன்று முனை, நான்கு முனை போட்டியை தமிழ்நாடு தேர்தல் களம் சந்தித்தாலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய் வரும் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய் ஆட்சியை பிடிப்பது கடினம் என்று பல்வேறு கருத்துகணிப்புகளும் அரசியல் விமர்சகர்களும் கூறினாலும் அவருக்கு பெறப்போகும் வாக்கு சதவீதம் பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக, பகீரத பிரயத்தனம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

விஜய்யால் வெற்றி பெற முடியாது

ஜனநாயகன் பட பிரச்சனை கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை, தனிப்பட்ட பிரச்சனை என அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வரும் விஜய்க்கு அக்னி பரிட்சையாகவே சமீப நாட்கள் கடந்து செல்கின்றன. தவெகவுக்கு 80 சீட் வரை பாஜக ஆஃபர் கொடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்த நிலையில், இன்று தவெக தரப்பு அளித்த விளக்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் விஜய்யின் தவெக வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலையே ஏற்பட்டுள்ளது. திமுக - அதிமுக என இருபெரும் கட்சிகளை எதிர்த்து விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பீகாரில் பிரபல் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று சி-வோட்டர் கருத்து கணிப்பு நிறுவனத்தின் யஷ்வந்த் தேஷ்முக் கூறியுள்ளார்.

சி வோட்டர் யஷ்வந்த் தேஷ்முக் பேட்டி

டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தேஷ்முக் கூறியதாவது:- தனித்து போட்டியிட்டால் விஜய் வெற்றி பெற போவது இல்லை. ரஜினிகாந்த் அரசியலில் நுழைய முற்பட்ட போது நாங்கள் நடத்திய சர்வேயில் 16, 17 சதவீத வாக்குகள் பெறுவார் என்பது தெரிந்தது.

விஜய் 15, 16 சதவீதத்தை தாண்டப் போவது இல்லை. தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட விஜய் வெல்லப்போவது இல்லை. ஒருவேளை கூட்டணி அமைத்தால் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். திமுக - அதிமுக இடையே வாக்கு சதவீதம் 5 சதவீதத்திற்கும் கீழ்தான் உள்ளது.

பிரசாந்த் கிஷோர் கதிதான் விஜய்க்கு

எனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் முற்றிலும் வேறுபட்டதாக களம் மாறிவிடும். ஆனால், அவர் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் கதிதான் விஜய்க்கு ஏற்படும். 15 சதவீதம் வாங்கினால் கூட அவரால் வெல்ல முடியாது" என்று கூறினார்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளாரான பிரசாந்த் கிஷோர் ஜன்சுராஜ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற் தேர்தலில் தனித்து களம் கண்ட ஜன்சுராஜ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிரசாந்த் கிஷோரே படுதோல்வியை சந்தித்தார். வெறும் 3.44 சதவீத வாக்குகளே பிரசாந்த் கிஷோர் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+