2021ல் கருப்பு- சிகப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு வாக்களித்தவராச்சே விஜய்! அதிமுக மாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அங்கிள்னு சொல்றாரு, 2021 ஆம் ஆண்டு கருப்பு சிகப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு விஜய் வாக்களித்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

பொதுவாக தானே யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியே சொல்லக் கூடாது. ஆனால் உதயகுமார், விஜய் யாருக்கு வாக்களித்தார் என்பதை தெரிவித்துள்ளார். அது ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது என்றாலும் தவறு என்கிறார்கள்.

joseph Vijay rb udhayakumar

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்த தவெக, இரட்டை இலையில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி, தவெகவில் இணைத்துக் கொண்டது.

ராஜினாமா செய்த இரு அதிமுக எம்எல்ஏக்களுக்கும் வாக்களித்த மக்களின் கைகளில் மையின் ஈரம் காய்வதற்குள் ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்கின்ற ஒரு நம்பிக்கை துரோகத்தை, பச்சை துரோகத்தை, பட்டவத்தமாக செய்ததை நியாயப்படுத்துகின்ற வகையில் நேற்றைய தினம் முதல்வர் விஜய் ஒரு பொய்யை சொன்னார்.

தனது கட்சிக்கு தனி பெருபான்மை கொண்டுவர வேண்டும், கூட்டணி கட்சிகளை வெளியே அனுப்பிவிட வேண்டும் என்ற அவருடைய ரகசிய திட்டத்தை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, கோயபல்ஸ் பிரச்சாரத்தின் உச்சமாக முதல்வர் விஜய் பேசியதை பார்க்கின்ற போது, அவருக்கு இடைத்தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது தெரிகிறது.

அதிமுகவை அழிக்க முயல்கிறார். முதல்வர் விஜயின் ஆசை வார்த்தைக்கு முதல்வர் விஜயின் ஆசை வார்த்தையை நம்பி, பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும், ஆளுங்கட்சியின் செல்வாக்கிற்காக ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் தங்களுக்கு பல்லக்கு தூக்குவதற்கு தற்போது தவெக கட்சிக்கு வரலாம்.

ஆனால் இன்றைக்கு திமுகவிடம் ஒரு ரகசிய உடன்பாடு யார் வைத்திருப்பது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்று உதயசூரியனுக்கு வாக்களித்த நீங்கள், இரண்டு வருடத்திலே கட்சியை துவங்கி, இந்த நிமிடம் வரை ஸ்வீட் அங்கிள் என்று ஸ்டாலினை புகழ் பாடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? ஆகவே ஸ்வீட் அங்கிள் ஸ்டாலின் என்று நீங்கள் சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?

தீய சக்தி திமுக என்று சொல்லிவிட்டு ஸ்வீட் அங்கிள் என்று சொல்கிறீர்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் என்றைக்கும் திமுக தலைவர்களை ஸ்வீட் அங்கிள் என்று என்றைக்கும் பேசியதில்லை.

இன்றைக்கு நீங்கள் தனி பெரும்பான்மைக்காக நீங்கள் எந்தெந்த குறுக்கு வழிகளிலே கையாள வேண்டுமோ, அதையெல்லாம் கையாண்டீர்கள். குதிரை பேரத்தை கையிலே எடுத்து, நீங்கள் செய்து வருகிறீர்கள். ஆட்சி அதிகாரத்தை நீங்கள் இழக்கிற போதுதான், உங்களை விட்டுவிட்டு முதலிலே ஓடுபவர்கள் இப்போது உங்களிடத்திலே தஞ்சம் புகுந்திருக்கிற அடைக்கலம் வந்திருக்கிறவர்கள் என்பதை மட்டும் உங்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

வாழ்ந்தாலும் ,வீழ்ந்தாலும் ,உயிரே போனாலும் அதிமுகவின் சாமானிய தொண்டனாக உயிர் மூச்சு உள்ளவரை உழைப்பது ஒன்றைத் தவிர விசுவாச தொண்டர்களுக்கு வேறு பாதையே கிடையாது.

4 மாதத்தில் ஆட்சியில் 40,000 கோடியை தவெக அரசு கடன் வாங்கி உள்ளது. அதற்கு முதல்வர் விஜய் மதுராந்தகம் கூட்டத்திலே தேர்தல் பரப்புரையில் ஒரு புதிய விளக்கத்தை தந்திருக்கிறார்.

கடந்த காலங்களில் தவெக கட்சி தலைவராக இருக்கிறபோது, கடந்த கால அரசுகள் வாங்கிய கடனை நீங்கள் குற்றம் சாட்டி பேசினீர்கள், அந்த விஜய் எங்கே போனார்?

இப்போது முதல்வர் விஜய் கடன் வாங்குவதற்கு அரசியல் விஞ்ஞானியாக ஒரு பெரிய விளக்கத்தை தந்திருப்பதை பார்க்கிறபோது, தேர்தலுக்கு முன்பு விஜயின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை, தற்போது 100% பொய்த்து போய்விட்டது என்பதை உணர முடிகிறது.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இரட்டை இலையில் மக்கள் வாக்களிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் ஆர்.பி.உதயகுமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+