முதலமைச்சர் அறை ஜோதிடர் சொன்னதால் மாறுதா? போட்டோ ஆப்சன் வேண்டாம்! உடனே தஞ்சாவூர் போங்க: தராசு ஷ்யாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன.. இது மிகப்பெரிய தவறான முடிவாக இருக்கும்... . இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பையே உண்டாக்கும். பிராக்டிக்கல் பிரச்சனைக்கு தவெக அரசு வரவேண்டும்" என்று பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஷ்யாம்.

News focus என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஷ்யாம், "மத்திய அரசாங்கம் இருக்கும் நிலையைப் பார்த்தால் அவர்கள் காவிரி பிரச்சனை குறித்து கவலைப்படுவதாகவே தெரியவில்லை... கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசில் இருக்கும் அமைச்சர்கள் மனிதாபிமான அடிப்படையில் கூட தண்ணீரைக் திறந்துவிட முன்வரவில்லை.

Chief Minister Office Vijay Secretariat Tharasu Shyam

ஜனநாயகன் பட கொண்டாட்டம்

நாடாளுமன்றத்தில் திமுக காவிரி விவகாரம் குறித்து குரல் எழுப்பி வந்தாலும், முதலமைச்சர் விஜய் இது குறித்து எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவர் தனது "ஜனநாயகன்" படக்குழுவினருடன் படத்தைப் பார்ப்பதில் பிஸியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன.. இது மிகப்பெரிய தவறான முடிவாக இருக்கும்... காமராஜர் காலத்திற்கு முன்பிருந்தே முதலமைச்சர் அறையாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இடத்திற்கு பின்னால் ஒரு பெரிய மரபும் வரலாறும் இருக்கிறது. சில வசதிக் குறைபாடுகளுக்காக அந்த மரபுகளை விட்டுக்கொடுக்கக் கூடாது.

முதலமைச்சர் அறை மாறுகிறதா

பிரிட்டிஷ் மன்னரின் கிரீடமும் செங்கோலும் பல நூறு ஆண்டுகள் பழமையானது என்பதால் அதை மாற்றிவிடுவார்களா? யாரோ ஜோதிடர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக முதலமைச்சர் அறையை மாற்றுவது வரலாற்றுத் திரிப்பாகவே முடியும்.

பிரிட்டிஷ் மன்னரின் கிரீடமும் செங்கோலும் பல நூறு ஆண்டுகள் பழமையானவை என்பதால், தூக்குவதற்குப் பாரமாக இருக்கிறது என்று சொல்லி அவற்றை மாற்றிவிட முடியுமா? யாரோ ஜோதிடர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக முதலமைச்சரின் அறையை மாற்றுவது வரலாற்றுத் திரிப்பாகவே அமையும்.. தலைமை செயலகத்தை மாற்றுவது என்பது வேறு, முதலமைச்சர் அறையை மாற்றுவது என்பது வேறு.. இத்தகைய முடிவுகள் சாதாரணப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பையே போய் முடியும்..

தஞ்சாவூர் போங்க

ஒருபுறம் டெல்டா விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கும் சூழலில், மறுபுறம் அமைச்சர்கள் சினிமாவை பார்த்துவிட்டு அழுகிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பையே உண்டாக்கும். பிராக்டிக்கல் பிரச்சனைக்கு தவெக அரசு வரவேண்டும்.

பழைய அரசு தவறு செய்துவிட்டது என்று காரணம் சொல்வதை நிறுத்திவிட்டு, முதலமைச்சர் உடனடியாகக் களத்திற்கு வர வேண்டும். "முதலமைச்சரான பிறகு ஊர் ஊராக வருவேன்" என்று சொன்னவர், வரவேயில்லையே.. உடனடியாகத் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள கள நிலவரத்தைப் பார்வையிட வேண்டும். அப்போதுதான் அங்குள்ள நிலைமை முதலமைச்சருக்கு புரியும்.

விஜய்க்கு கோரிக்கை

விவசாயிகளிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கிராமப்புற சிறு சிறு நகரங்களின் வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. நள்ளிரவு வரை இயங்கும் உணவகங்கள் கூட மாலை 7 மணிக்கே மூடப்படும் அளவிற்கு வியாபாரம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் இதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாகிவிடும்.

அதனால் வெறும் முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு "போட்டோ ஆப்சன்" கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.. மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முதலமைச்சர் உடனடியாகக் களத்திற்கு வர வேண்டும்

மீனவ நண்பன் - எம்ஜிஆர்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு "மீனவ நண்பன்", "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், அந்த திரைப்படங்களின் விளம்பரங்களில் எங்குமே "முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்தார்" என்று குறிப்பிடப்படவில்லை. அவர் தனது அரசியல் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டார்.

மக்களை பொறுத்தவரை சினிமா நிலவரங்களை விடவும் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளே முதன்மையானவை. இந்த நீர்ப் பிரச்சனையை உடனடியாகச் சீரமைக்கத் தவறினால், கூடிய விரைவில் சென்னையில் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டிய மிக மோசமான நிலைமை ஏற்படும்" என்று தராசு ஷ்யாம் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+