அமைச்சர் மரிய வில்சன் ஸ்டைல் மாதிரி இருக்கே.. பேச்சு வழக்கில் தீர்மானத்தை வாசித்த முதல்வர் விஜய்!
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தை பேச்சு வழக்கில் வாசித்தது விவாதமாகி இருக்கிறது. ஏற்கனவே நிதியமைச்சர் மரிய வில்சன் தனக்கு தமிழ்த் தெரியாது என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், முதல்வர் விஜய்யும் பேச்சு வழக்கில் தீர்மானத்தை வாசித்திருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது.
சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை வாசித்த முதல்வர் விஜய், 50 வருஷமா இருந்து வந்த டி லிமிட்டேஷன் தடைய அகற்றி, 2011 சென்சஸ் அடிப்படைல மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க நாடாளுமன்றத்துல ஒரு மசோதா ஏப்ரல் 2026ல அறிமுகப்படுத்தப்பட்டு அந்த மசோதா தோல்வியில் முடிஞ்சது.

இப்போ மீண்டும் மத்திய அரசு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க செய்து, டிலிமிட்டேஷன் மசோதாவ அறிமுகப்படுத்த உத்தேசித்து இருப்பதா சில அரசியல் கட்சிகள் தெரிவிப்பதா கூறப்படுது.. இந்த வரக்கூடிய மசோதா குறித்து ஆகஸ்ட் 8 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களோட நடந்த கூட்டத்துல விவாதிச்ச அப்போ, மேல சொன்ன மாதிரி தற்போது அறிமுகப்படுத்த மசோதா நிறைவேறினால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா 50% மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்தாலும், 2026 சென்சஸ்க்கு பின், மாநிலத்தின் மக்கள் தொகை தொகுதிகள் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும்.
இப்படி செஞ்சா, தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவா குறைய வாய்ப்பிருக்கு.. கடைசில மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பா செயல்படுத்துன தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் அரசியல் பிரதிநிதித்துவ அநீதி இழைக்கப்படும். சர்வ வல்லமை பெற்றதா டிலிமிட்டேஷன் ஆணையம் இருக்கு. இந்த அதிகாரத்தை தவிர்த்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பா செயல்படுத்தி பொருளாதார முன்னேற்றம் பெற்று வரும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மக்களவை மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அப்படியே நிலை நிறுத்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது. எனவே தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயேன எண்ணிக்கை நிரந்தமாக வைக்கவும், மேலும் தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை விகிதத்தையும் நிலை நிறுத்த வேண்டும்.
அதற்கு தேவையான மற்றும் உரிய சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஒருமனதா தீர்மானிக்கப்பட்டுச்சு. என்று வாசித்தார். வழக்கமாக சட்டசபையில் தீர்மானங்கள் ஆங்கிலம் அல்லாத பேச்சு வழக்கு அல்லாத தமிழ் மொழியிலேயே கொண்டு வரப்படும். முதல்வர் விஜய்யும் முதல் சில சட்டசபைக் கூட்டங்களில் தமிழில் பேச முயற்சித்தார்.
ஆனால் அதன்பின் மொத்தமாகவே அவர் பேச்சு வழக்கிற்கு மாறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பாமக சார்பாக முதல்வர் விஜய் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் முதல்வர் விஜய் தொடர்ச்சியாக தீர்மானங்களை கூட பேச்சு வழக்கிலேயே கொண்டு வரத் தொடங்கி இருக்கிறார். இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே, நிதியமைச்சர் மரிய வில்சன் தனக்கு தமிழ் தெரியாது என்று ஆவேசமாக பேசியதோடு, என்னுடைய ஸ்டைலை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் காட்டினார். இதனால் முதல்வர் விஜய் முன் உதாரணமாக தமிழில் தீர்மானங்களை வாசிக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் வலியுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
