நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.. கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மீது விஜய் அதிருப்தி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகள் மீது முதல்வர் விஜய் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது. விசிக நிர்வாகிகள் பொதுவெளியில் விஜய்யை விமர்சிப்பது தவெக தலைமையை உஷ்ணமாக்கி இருக்கிறது. அதேபோல் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்புகள் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை வைத்ததும் டென்ஷனாக்கி உள்ளது.

தவெக ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது முதல்வர் விஜய் அதிருப்தியில் இருக்கிறார் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் ஒரு வலிமையான கூட்டணியை கட்டமைத்துவிட வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சி அதற்கு ஒத்து வரும் சூழலில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியே இருக்கின்றன.

NEET

தவெக அமைச்சரவையில் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும், விசிகவினர் தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் விஜய்யை சாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் முன்னாள் எம்எல்ஏ ஷா நவாஸ் நேரடியாகவே தவெக மீதும், விஜய் மீதும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். இதனால் திருமாவளவனும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார்.

மறுபக்கம் நீட் எதிர்ப்பு போராட்டத்தை வளரவிடக் கூடாது என்பதில் தவெக அரசு முனைப்புடன் இருந்தது. இதன் காரணமாகவே போராடும் மாணவர்களை காவல்துறையினர் தங்களின் பேட்ஜ் கூட அணியாமல் தாக்க அனுமதி அளித்தது. அதேபோல் மெரினாவில் போராட்டம் நடக்க கூடாது என்பதால், முன் கூட்டியே மெரினா கடற்கரைக்கும் பூட்டு போட்டது.

இப்படியான சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் கட்சி சார்பின்றி கருப்பு சட்டையுடன் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர். நீட் தேர்வுக்கு எதிரான ஒரு நெருப்பு பாலன் இல்லத்தில் தொடர்ந்து அணையாமல் எரிந்து வந்தது என்றே சொல்லலாம்.

அதில் வந்த பெரும்பாலானோர் தவெகவின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக சாடினர். போராட்டத்தை ஒடுக்கும் தவெகவையும், முதல்வர் விஜய்யையும் சாடினர். இதன் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தவெக மீது அதிருப்தியில் இருப்பது தெரிய வந்தது. இதனை உளவுத்துறை முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

இதனை உணர்ந்து கொண்ட முதல்வர் விஜய், கூட்டணி கட்சியினர் மீது அதிருப்தி அடைந்திருக்கிறார். இருப்பினும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட விஜய் விரும்பவில்லை. இடைத்தேர்தலில் தவெக அடைந்த வெற்றிக்கு பின் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+