’டிஸ்ரப்டர்’ அப்ப விஜயகாந்த்.. இப்ப விஜய்! 25 தொகுதி லட்சியம்..12 நிச்சயம்! ரஜினியின் நண்பர் கணிப்பு
சென்னை: 2006-ல் விஜயகாந்த் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் போலவே, 2026-ல் விஜய் ஒரு 'டிஸ்ரப்டர்' (பிளவு ஏற்படுத்துபவர்) ஆக செயல்படுவார். விஜய்யின் தவெக 7 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெறவும், 20 முதல் 25 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது என பாஜக பிரமுகருமான நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கடந்த 1977 முதல் இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றை உற்று நோக்கினால், வாக்காளர் எண்ணிக்கை உயர்வுக்கும், வாக்குப்பதிவு சதவீதத்துக்கும் இடையே ஒரு சமநிலையற்ற போக்கு நிலவுவதை அறியலாம்.
1980-ல் வாக்காளர் எண்ணிக்கை 25 லட்சம் அதிகரித்தபோது, வாக்குப்பதிவு 44 லட்சம் உயர்ந்தது. 1984-ல் 32 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்தாலும், வாக்குப்பதிவு 29 லட்சம் மட்டுமே உயர்ந்தது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தால் 22 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தும், வாக்குப்பதிவு 6 லட்சம் குறைந்தது.

ஆனால், கடந்த 2006 தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனை. 30 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்த நிலையில், வாக்குப்பதிவு 58 லட்சம் கூடியது. இதற்கு விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் முக்கிய காரணமாக அமைந்தது. அவர் உருவாக்கிய அலை, வாக்குப்பதிவில் பெரும் உயர்வை ஏற்படுத்தியதோடு, ஆட்சி சமன்பாடுகளையும் பாதித்தது. அதேபோல, தற்போது நடந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை, சிறப்புத் திருத்தங்களுக்கு (எஸ்ஐஆர்) பிறகு, மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.73 கோடி. சுமார் 86 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதால், மொத்த வாக்குகள் 4.90 கோடியை எட்டியுள்ளது. எதிர்பார்த்ததைவிட இந்த உயர்வு அதிகம்.
இதில் விஜய்யின் பங்கு முக்கியமானது. 2006-ல் விஜயகாந்த் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் போலவே, 2026-ல் விஜய் ஒரு 'டிஸ்ரப்டர்' (பிளவு ஏற்படுத்துபவர்) ஆக செயல்படுவார். விஜய்யின் தவெக 7 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெறவும், 20 முதல் 25 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம், தவெக உருவாக்கும் வாக்குப் பிளவு பல தொகுதிகளில் முடிவுகளை தலைகீழாக மாற்றும்.
தற்போதைய அரசின் மீதான அதிருப்தி காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சில பகுதிகளில் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சென்னை போன்ற நகர்ப்புறங்களில் திமுக கடும் போட்டியை சந்திக்கக்கூடும். இவற்றைப் பார்க்கும்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
அதேநேரம், திமுக தனது 'மகளிர் உரிமைத் தொகை' போன்ற நலத்திட்டங்கள் மூலம் தனது ஆதரவு வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே, ஆளுங்கட்சி தொடருவதற்கான வாய்ப்பு உருவாகும். மொத்தத்தில், இந்த தேர்தல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் நிலையான வாக்கு சக்தியும், மாற்றத்தை விரும்பும் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் புதிய தேடலும் நேருக்கு நேர் மோதும் ஒரு களமாக இருக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியின் புதிய கட்டத்தை தொடங்கக் கூடியதாக இத்தேர்தல் அமைந்துள்ளது" என கூறியுள்ளார்.
-
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன்












Click it and Unblock the Notifications