தேர்தலில் களமிறங்கும் விஜய்.. லிஸ்ட்டில் உள்ள 5 தொகுதிகளின் பின்னணி.. எல்லாமே ‛வி' சென்டிமென்ட்
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது பற்றி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ‛வி' சென்டிமென்ட்டில் நடிகர் விஜய் சென்னையில் 2 தொகுதிகள், சென்னைக்கு வெளியே 3 தொகுதிகளில் நிலவரங்கள் பற்றிய கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இந்த தேர்தலில் கட்சி தலைவரான விஜயும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் ‛வி'சென்டிமென்ட்டில் உள்ளார். ‛வி' எனும் ஆங்கில எழுத்தில் தொடங்கும் தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று ஜோதிடர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 2 தொகுதிகள்
இதனால் ‛வி' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் தொகுதிகளை குறிவைத்து அதன் களநிலவரம் பற்றி விஜய் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி சென்னையில் உள்ள வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளின் மீதும் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் தொகுதிகளில் விஜய் போட்டியிடலாம் என்று நினைக்கிறார்.
விஜய்க்கு என்ன தொடர்பு?
இதில் 2 தொகுதிகளின் பெயர்களும் வி என்ற ஆங்கில எழுத்தில் தான் தொடங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு தொகுதிகளுக்கும், விஜய்க்கும் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான தொடர்பை கொண்டுள்ளது. வேளச்சேரி தொகுதி என்பது விஜயின் பனையூர் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புறநகர் பகுதியாக இருந்தாலும் கூட இப்போது வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
அதேபோல் விருகம்பாக்கம் அவரது பெற்றோர்கள் வசிக்கும் இடம். இந்த தனிப்பட்ட தொடர்புகளை தாண்டி வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் அரசியல் ரீதியாகவும் விஜய் தனக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார். இதனால் தான் அவர் இந்த 2 தொகுதிகளின் களச்சூழல் பற்றி அவர் கேட்டறிந்து வருகிறார்.
பிற 3 தொகுதிகள் எது?
மேலும் சென்னைக்கு வெளியே 3 தொகுதிகிளில் விஜய் கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உள்ளிட்ட தொகுதிகள் பற்றியும் விஜய் ஆராய்ந்து வருகிறார். ‛வி' சென்டிமென்ட் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த 5 தொகுதிகள் விஜயிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இறுதி முடிவை விஜய் மட்டுமே எடுக்க உள்ளார்.
விக்கிரவாண்டி பின்னணி
இதில் விக்கிரவாண்டி என்பது தவெகவின் முதல் அரசியல் மாநாடு நடந்த இடமாகும். கட்சியின் கொள்கையை அவர் அறிவித்த இடம். பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் அறிவித்த இடமாகும். அங்கு நடந்த மாநாட்டில் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால் விஜய் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
வேதாரண்யம் பின்னணி
வேதாரண்யம் சட்டசபை தொகுதி நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் அதிகம் உள்ளனர். அகமுடையார், வன்னியர் சமுதாயத்தினர் அதிகம் உள்ளனர். இப்போது சிட்டிங் எம்எல்ஏவாக முன்னாள் எம்எல்ஏ ஓஎஸ் மணியன் உள்ளார். நாம் தமிழர் சார்பில் இடும்பாவனம் கார்த்திக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேடசந்தூர் பின்னணி
வேடசந்தூர் தொகுதியில் திமுகவின் காந்தி ராஜன் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் ஒக்கலிக கவுடர் வகுப்பை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பிள்ளைமார், கவுண்டர், நாயுடு சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இதுதவிர ஆசாரி, நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், இஸ்லாமியர்களும் கணிசமான அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications