ஜனநாயகன் பாடலை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்தது விஜய் மகளே இல்லையாமே!
சென்னை: நடிகர் விஜய்- சங்கீதா இடையே விவாகரத்து பிரச்சனை இருந்து வரும் நிலையில் அவர்களது மகள் திவ்யா சாஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அப்பாவுக்கு ஆதரவாக ஜனநாயகன் பட பாடலை பதிவிட்டதாக சொல்லப்படும் செய்தியில் அந்த பதிவு விஜய் மகளுடையதே இல்லை என்கிறார்கள்.
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விவாகரத்து மனுவில் "எனது கணவருக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பை கைவிடுவதாக அவர் சொல்லியும் செய்யவில்லை.

அந்த நடிகையும் எனது கணவருடன் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானமாக இருக்கிறது. அவரது கள்ளக்காதலை தட்டி கேட்டதால் எனக்கு பொருளாதார தடை விதித்துள்ளார்.
என்னை அவரது வீட்டில் தங்க வைக்க மறுக்கிறார். சுமூகமாக விவாகரத்து பெறலாம் என நான் செய்த முயற்சிக்கு அவர் ஒத்துழைக்கவே இல்லை" என்றும் அந்த மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார்.
அது போல் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தின் பூஜைக்கு கூட விஜய் செல்லவில்லை என்கிறார்கள். அது போல் லண்டனில் பட்டம் பெற்ற போது கூட தந்தைக்கு பதிலாக ஜேசன் மட்டுமே கலந்து கொண்டார். விஜய் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் அட்லி மனைவி வளைகாப்புக்கு மும்பை வரை விஜய் சென்றிருந்தது பெரும் விவாதப் பொருளானது. அது போல் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட குழந்தைகளை விஜய் அழைத்து வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் விஜய் மகன் சென்னையில் ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
விஜய்யுடன், அவருடைய குடும்பத்தினர் பேசக் கூட அவரை சுற்றியிருப்பவர்கள் அனுமதி தருவதில்லை என்கிறார்கள். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற "கண்ணே மணியே கண்ணிமையே " பாடலை விஜய் மகள் தனது இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் மகள் திவ்யா, அப்பாவுக்கு ஆதரவு, மகன் சஞ்சய் அம்மாவுக்கு ஆதரவு என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இது விஜய் மகளின் இன்ஸ்டா ஐடியே இல்லை என்கிறார்கள். அந்த ஐடியை இன்ஸ்டா பேஜில் போட்டாலும் User Not found என வருகிறது.












Click it and Unblock the Notifications