பிள்ளையார் சுழிலாம் போட்டாச்சுன்னு சொன்னாரே.. ஆசையாக இருந்த எடப்பாடியை.. ஏமாற்றிய விஜயின் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாரம் தனது எழுச்சி பயணத்தில் முன்பை விட உற்சாகமாக காணப்பட்டார். தவெக அதிமுக கூட்டணிக்கு வரப்போவதாக மறைமுகமாக குறிப்பிட்டு வந்தார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கட்டுப்பாட்டில் எடுத்ததில் இருந்து வரிசையாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்து உள்ளார். இதனால் அவரின் பிரச்சாரங்களில் எல்லாம் பெரிதாக உற்சாகம் இன்றி காணப்பட்டார். அதிலும் சமீபத்தில் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பினார். கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பிரஷர் கொடுத்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணி செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது.

TVK Vijay

கைகோர்க்கும் விஜய் எடப்பாடி

அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக இன்று மக்கள் மத்தியில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

போன் கால் பேச்சு

ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.

எடப்பாடியை ஏமாற்றிய தீர்மானம்

இப்படிப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் அந்தஸ்தை விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதால் விஜயுடன் அவர் கூட்டணி வைப்பது இனி இயலாத காரியம் ஆகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+