2026 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. தவெக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு!
சென்னை: தவெக செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக - பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் நாளை மறுநாள் ஜூலை 6 ஆம்தேதி நடைபெறும் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம், விஜய்யின் தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தவெக செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க இருக்கிறது தவெக.
தவெக அறிவிப்பால், அக்கட்சி பாஜக - அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வந்த நிலையில், அந்தக் கூட்டணியில் தவெக இணையாது எனத் தெரிகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் எனக் கூறி இருந்தார். அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்களும் தவெக, தங்கள் கூட்டணியில் இணையக்கூடும் எனப் பேசி வந்தனர்.
இந்தச் சூழலில் தவெகவின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் தவெக-வை இணைத்து மெகா கூட்டணி அமைக்கும் பாஜக - அதிமுகவின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தவெக அறிவிப்பால் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications