முதல்வர் விஜய் AI டீப்பேக் வீடியோ.. பல லட்சம் மோசடி? ராஜஸ்தானில் 28 வயது இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் உருவத்தை பயன்படுத்தி ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட டீப் பேக் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி, பண உதவி வழங்குவதாக கூறி மோசடி நடந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த 28 வயது இளைஞரை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த காலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது மிக பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. பிரபலங்கள் பெயர் மற்றும் அவர்களின் போடடோகளை வைத்து நடக்கும் மோசடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி தான் தமிழ்நாடு முதல்வர் விஜய்யை வைத்து ஒரு மோசடி நடந்துள்ளது.

Vijay Deepfake Scam Rajsthan police AI

ஒருவர் கைது

தமிழக முதலமைச்சர் விஜய்யின் உருவத்தை வைத்து ஏஐ மூலம் டீப் பேக் வீடியோக்களை உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடி நடந்துள்ளது. இதில் சில லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் தான் ராஜஸ்தானை சேர்ந்த 28 வயது இளைஞரை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒருவரை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த ஷயாபு கான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ராஜஸ்தான் போலீசாரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கம்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜய் பேசுவது போன்ற வீடியோக்கள் உருவாக்கப்பட்டது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் விஜய் இந்தியில் பேசுவது போன்ற போலியான குரலும் பயன்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் அதில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு நிதியுதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலர் பணத்தை இழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு வழக்கமான இணைய சோதனையின்போது இந்த வீடியோக்களை கண்டறிந்தது. தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஒருவர் கைது

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியனர். டிஜிட்டல் ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சிபிசிஐடி சார்பில் தனிப்படைகள் அனுப்பப்பட்டன. அல்வார் மாவட்டத்தின் உள்பகுதியில் ஷயாபு கான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தமிழகம் அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த மோசடியில் பணத்தை இழந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் ஷயாபு கானுக்கு எதிரான வழக்கை வலுப்படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

அடுத்தகட்டமாக ஷயாபு கான் தனியாக இந்த மோசடியில் ஈடுபட்டாரா அல்லது பெரிய மோசடி கும்பலின் ஒரு பகுதியாக செயல்பட்டாரா என்பது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதேபோன்ற பல டீப் பேக் வீடியோக்கள் பாகிஸ்தானில் இருந்து ஃபேஸ்புக் கணக்குகள் மூலமாகவும் பரப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. அது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் இதுபோன்ற வீடியோக்களை நம்பி ஏமற வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது போன்ற வீடியோக்களில் இடம்பெறும் தொலைப்பேசி நம்பர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் இதை நம்பி வாட்ஸ்அப் குழுக்களில் இணைய வேண்டாம் என்றும் தமிழக போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+