மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது!
சென்னை: பெண்களை இழிவாக பேசியதாக கூறி, பொன்ராஜ் மீது விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால், அந்த புகார் கடிதத்தை விஜய் சற்று நேரத்தில் தன்னுடைய x பக்கத்திலிருந்து டெலிட் செய்துவிட்டார்.
புகார் கொடுத்தது விஜய்தான். பின்னர் ஏன், அந்த கடிதத்தை தனது x பக்கத்திலிருந்து டெலிட் செய்ய வேண்டும்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்
இதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக ஆன்லைன் குற்றங்கள் தொடர்பான புகார் அளிக்க வேண்டும் எனில், சில நடைமுறைகள் இருக்கின்றன. பொன்ராஜ் மீதான புகாரில் அது பின்பற்றப்படவில்லை. அதாவது பொன்ராஜ் மீது உண்மையாகவே நடவடிக்கை எடுக்க கோருகிறீர்கள் எனில், பொன்ராஜ் எங்கு பேசினார்? எந்த சோசியல் மீடியா தளத்தில் பேசினார்? அதன் URL லிங்க், யூடியூப் எனில், எத்தனையாவது நிமிடத்தில் பேசினார் என்பதையெல்லாம் குறிப்பிட வேண்டும்.
டெலிட் செய்த விஜய்
குறிப்பாக சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம் ரொம்ப முக்கியம். ஆனால், விஜய் கொடுத்த கடிதத்தில் இப்படி எந்த விவரமும் இல்லாமல், மொட்டை கடுதாசியாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்திருக்கின்றனர். இந்த காரணத்தால்தான் அந்த கடிதத்தை விஜய் தனது x பக்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.
விவரம் தெரிந்தவர்கள் எங்கே?
அடுத்த முறை புகார் கொடுக்கும்போது இந்த விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தும் நெட்டிசன்கள், கொஞ்சமாவது விவரம் தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நோக்கம் என்ன?
பெண்களை தரக்குறைவாக பேசுவதை எப்போதுமே ஏற்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. அப்படி பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், இது தொடர்பாக அரசியல் தலைவர் ஒருவர் புகார் அளிக்கிறார் எனில், அந்த புகார் எவ்வளவு விவரமானதாக இருந்திருக்க வேண்டும்?
விஜய் அளித்த புகார் கடித்தத்தில் அப்படி எந்த விவரமும் இல்லாதது, வெறுமென நாங்களும் புகார் கொடுத்தோம் என்பதை அறிவிக்கும் போன்றதாகத்தான் இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications