விஜய் தேவன்னு கூப்பிடறாங்களாம்.. கேரளாவில் விஜய்யின் தவெக கோட்டை.. இவர்தான் தலைவரா? கவனித்த பாஜக
சென்னை: "கொச்சின் போன்ற பகுதிகளில் வீடு வாங்கி வந்து தங்கும்படியும், தவெகவை உடனடியாக தொடங்கும்படியும் கேரளா மக்கள் தேவன் மூலமாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள்.. தேவனுக்கு வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பொறுப்பு மற்றும் தவெகவின் கேரளா தலைமைப் பொறுப்பு குறித்தும், அங்கு ஒரு பலமான புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவது பற்றியும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது என்று மூத்த சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அறம்நாடு சேனலில் பேட்டி தந்துள்ள வெங்கடேசன், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். கேரளாவிலும் இதே ரிக்கார்டை பதிவு செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

ஏற்கனவே மம்மூட்டி மற்றும் மோகன்லால் படங்களுக்கு இணையான அல்லது அதைவிட அதிகமான எதிர்பார்ப்பும் ஆதரவும் விஜய்க்கு அங்கு உள்ளது. இப்போது தவெகவின் கேரளா மாநிலத் தலைவராக நடிகர் தேவனை நியமிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் தேவன் பாஜக
தேவனின் அரசியல் மற்றும் தனிப்பட்ட பின்னணியை வைத்து பார்த்தால், இந்த பொறுப்புக்கு அவர் மிகச்சரியான தேர்வாகும்..கடந்த 1975ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வசித்து வருவதால், தன்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான் என்று வெளிப்படையாகவே சொல்பவர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை போன்ற இக்கட்டான காலங்களிலும் தமிழ்நாட்டிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். 2004-ல் கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற கட்சியைத் தொடங்கி 2 முறை சட்டமன்றத் தேர்தல்களில் நின்ற அனுபவம் கொண்டவர். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவின் மாநில துணைத் தலைவராகக் கேரளாவில் பல்வேறு சந்து பொந்துகளிலும் கட்சிக்காக உழைத்திருந்தாலும், அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததாலும், உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததாலும் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
தவெக பொறுப்பில் தேவன்
நடிகர் விஜய்யும் தேவனும் "இஞ்சி இடுப்பழகி", "ஆதி", "ஷாஜகான், "சிவகாசி" உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.. அந்த நாட்களில் விஜய்யின் பழக்கவழக்கங்களை அருகிலிருந்து கவனித்து வருகிறார் தேவன்..
விஜய் மற்றவர்கள் பேசுவதை முழுமையாகப் பொறுமையாக கேட்பவர், தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டுத் தேவையானதை மட்டும் சுருக்கமாகப் பேசும் குணம் கொண்டவர் என்றெல்லாம் தேவன் நற்சான்று தருகிறார். தவெக அடுத்த கட்டமாக தேசிய அளவில் வளர்ந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் டெல்லி வரை செல்வதற்குத் தகுதியான ஒரு வலிமையான தலைவர் கேரளாவில் தேவைப்படுவதால், தேவன் பொருத்தமானவராகவே கருதப்படுகிறார்.
சென்னையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், வரும் 10ம் தேதிக்கு பிறகு நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசலாம் என்று நடிகர் தேவனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யை நேரில் சந்தித்துத் தனிப்பட்ட முறையில் விவாதிக்கும்போது, கேரளாவில் கட்சியைத் தொடங்குவது தொடர்பான பல முக்கிய மற்றும் வெளிப்படையான தகவல்கள் வெளியாகும் என்று தேவன் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தேவன்
இதனிடையே, கேரளாவில் கொச்சின் போன்ற பகுதிகளில் வீடு வாங்கி வந்து தங்கும்படியும், தவெகவை உடனடியாக தொடங்கும்படியும் கேரளா மக்கள் தேவன் மூலமாகத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள்.. தேவனுக்கு வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பொறுப்பு மற்றும் தவெகவின் கேரளா தலைமைப் பொறுப்பு குறித்தும், அங்கு ஒரு பலமான புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவது பற்றியும் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது.
பாஜகவிலிருந்து விலகிய பிறகு கேரளா மக்கள் தேவன் மீது மிகுந்த மரியாதை செலுத்த துவங்கியிருக்கிறார்கள்.. ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் எழுந்து நின்று அவரை வரவேற்று உட்கார வைக்கும் நிலைக்கு மாறியிருக்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, தேவனின் பெயருடன் விஜய்யின் பெயரையும் சேர்த்து மக்கள் "விஜய் தேவன்" என்றே கூப்பிட துவங்கிவிட்டார்கள்.. தவெக இன்னும் அதிகாரப்பூர்வமாகத் கேரளாவில் தொடங்கப்படாத நிலையிலும், நடிகர் விஜய் எப்போது கேரளா வருவார், எப்போது கட்சியைத் தொடங்குவார் என்று அங்குள்ள மக்கள் தேவன் மூலமாக விசாரித்தபடி உள்ளனர்.
கேரளாவில் தவெக
தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசிய பிறகு, கேரளாவில் கட்சி கட்டமைப்பை எப்படி உருவாக்குவது மற்றும் அடுத்த கட்டமாக எந்தெந்த வழிகளில் செயல்படுவது என்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும்... தேவன் கட்சியில் இணைவதன் மூலம் மேலும் பல பிரபல நடிகர்களும் திறமையானவர்களும் தவெகவை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
ஏற்கனவே கேரளா முழுவதும் விஜய்க்கு இருக்கும் நற்பணி மன்றங்கள் மற்றும் மக்கள் ஆதரவு இதற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்... குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இப்போது தேசிய அளவிலும் பிரதமர் பதவியை நோக்கியும் விஜய் மேற்கொண்டுவரும் இந்த அசுர வளர்ச்சி சரியான பாதையில்தான் செல்கிறது, இது தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றெல்லாம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
