விசிக, கம்யூனிஸ்ட்கள் காலம் தாழ்த்துவது நல்லதல்ல.. விஜய் ஆட்சி காலத்தின் அவசியம்.. இயக்குநர் அமீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிகவும், கம்யூனிஸ்ட்களும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று இயக்குநர் அமீர் வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். இது தவெகவினர் மத்தியில் சோசிஉஅல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றியை பெற்றுள்ளன. தனிப்பெரும் கட்சியாக தவெக உருவாகி இருக்கும் சூழலில், அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இருந்தாலும் தவெக ஆட்சியமைக்க இன்னும் 6 எம்எல்ஏ-க்களின் தேவை இருக்கிறது.

Director Ameer

அதற்காக விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விஜய்யும் கடிதம் அனுப்பி இருக்கிறார். ஆனால் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இருந்தாலும் ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி இருக்கிறார்.

நாளை நேரு ஸ்டேடியத்தில் முதல்வராக விஜய் பதவியேற்க ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் சூழலில், நாளை பதவியேற்பு விழா நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் போது முதல்வராக பதவியேற்ற பின் சட்டமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபித்து காட்டலாம். ஆனால் ஆளுநர் தரப்பு 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதனால் தவெகவினர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதோ என்ற பதற்றத்தில் இருக்கின்றனர். ஒருவேளை தவெகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அது தமிழ்நாட்டை மத்திய அரசு ஆட்சி செய்ய வழிவகுக்கும் என்ற விவாதம் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப்பில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அதில் இயக்குநர் அமீர், விசிகவும், கம்யூனிஸ்ட்களும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம் என்று தெரிவித்துள்ளார். இது தவெகவினர் மத்தியில் டிரெண்டாகி வரும் சூழலில், விசிக மற்றும் கம்யூஸ்ட்களின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+