Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடீஸ்வரரின் மகளாச்சே.. விஜய் மனைவி சங்கீதா யார்? ரசிகை மனைவியானது எப்படி? விவாகரத்து பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் சங்கீதா யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. விஜயும் தேர்தலில் களமிறங்க உள்ளார்.

vijay-divorce-case-who-is-his-wife-sangeetha-full-details-here

தற்போது விஜய் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நிர்வாகிகள் சந்திப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விவாகரத்து வழக்கு

இந்நிலையில் தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 24ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்துள்ளது. இதன்மூலம் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நடிகையுடன் தொடர்பு

அந்த மனுவில், ''விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவை நடிகையுடன் விஜய் வைத்திருந்தார். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரியவந்தது. நான் இதை கண்டுபிடித்தபோதும் விஜய் அந்த உறவை தொடர்ந்தார். திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.

கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் நம்பிக்கையை மீறுவதற்கு சமம் என நினைத்தேன். மேலும் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்ளை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது'' என விவாகரத்து கோரியுள்ளார்.

இலங்கை தமிழ் குடும்பம்

விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருப்பது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கிடையே தான் விஜய் மனைவி சங்கீதாவின் பின்னணி பற்றிய சில முக்கிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

விஜயின் மனைவி சங்கீதா இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோருடன் லண்டனில் செட்டில் ஆகியிருந்தார். சங்கீதாவின் தந்தை பெரிய தொழிலதிபர். கோடீஸ்வரர். சங்கீதா, விஜய் நடிப்பில் வெளியான படத்தால் ஈர்க்கப்பட்டார்.

விஜயை சந்திக்க...

குறிப்பாக "பூவே உனக்காக" படத்தில் விஜயின் நடிப்பில் சங்கீதா ஈர்க்கப்பட்டார். இதனால் அவர் விஜயின் தீவிர ரசிகையாக மாறினார். லண்டனில் இருந்து விஜயை சந்திக்க சங்கீதா சென்னை வந்தார். படப்பிடிப்பு தளத்தில் விஜயை, சங்கீதா சந்தித்து பேசினார். தீவிர ரசிகை என்பதை வெளிப்படுத்தி விஜயை புகழ்ந்தார். இது விஜயை கவர்ந்ததாக கூறப்படுகிறது.

விஜய் – சங்கீதா காதல்

அதோடு சென்னை வந்த சங்கீதா, விஜய்யின் வீட்டிற்கு அருகிலேயே தங்கியிருந்தார். இதனால் விஜய் அவரை தனது வீட்டிற்கு அழைத்தார். அங்கு விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரை சங்கீதா சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே அவர்களுக்கும் சங்கீதாவை பிடித்துப்போனது.

அதோடு, விஜய்க்கும், சங்கீதா மீது காதல் இருப்பதை சந்திரசேகர் - ஷோபா உணர்ந்தனர். இதனால் சங்கீதாவை திருமணம் செய்கிறாயா? என விஜயிடம் தந்தை சந்திரசேகர் கேட்டுள்ளார். அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இருகுடும்பத்தினரின் ஏற்பாட்டில் பிரமாண்டமாக விஜய் - சங்கீதா திருமணம் கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.

மகன் – மகள்

இந்த தம்பதிக்கு 2000ம் ஆண்டில் மகன் பிறந்தார். அவரது பெயர் ஜேசன் சஞ்சய். 2005ம் ஆண்டில் மகள் பிறந்தார். அவர் பெயர் திவ்யா சாஷா. ஜேசன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் 'நான் அடித்தால் தாங்கமாட்ட' பாட்டில் வந்து செல்வார். மகள் திவ்யா சாஷா 'தெறி' படத்தின் கிளைமேக்சில் வருவார். சங்கீதா பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜயுடன் சேர்ந்து பங்கேற்று வந்தார்.

2023லேயே பரவிய தகவல்

ஆனால், கடந்த 2023ம் ஆண்டில், அவர்களின் விவாகரத்து வதந்திகள் இணையதளங்களில் பரவ தொடங்கியது. இயக்குநர் அட்லியின் மனைவியின் வளைகாப்பு மற்றும் விஜய்யின் 'வாரிசு' பட டிரெய்லர் வெளியீட்டு விழாக்களில் சங்கீதா இல்லாமல் விஜய் மட்டுமே பங்கேற்றார். அப்போதே விவாகரத்து தொடர்பான செய்திகள் வெளியாகின.

ஆனால் விஜய் - சங்கீதா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் அமைதியாக இருந்தனர். இதனால் அது யூகமாக கருதப்பட்ட நிலையில் தற்போது சங்கீதா தனது கணவர் விஜயிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தற்போது விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில் அவரது மனைவி விவாகரத்து கோரி இருப்பது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+