Vijay Divorce: விஜய் விவாகரத்து விவகாரம்.. சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்கணும்.. தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், சங்கீதா ரொம்ப சிரமத்தில் இருக்கிறார்.. ரொம்ப கொடுமைப்படுத்தப்படுகிறார் என்றெல்லாம் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கட்சி பொதுக்கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பில் மத்திய-மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

விஜய் மனைவி விவாகரத்து மனு
புதிதாக அரசியல் களம் காணும் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வுகளையும் அரசியல் களம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காத நிலையில், திரைக்கு வராமல் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில் நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மனுவில் நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் உள்ளார் என்றும், அவருடன் அடிக்கடி வெளிநாடு பயணங்களை மேற்கொண்டு வருகிறார் என்றும் சங்கீதா கூறியிருந்தார்.
கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல்
இதைப் பற்றி கேட்ட பின்பும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்த உறவை தொடர்கிறார். 'விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை அந்த நடிகை வெளியிட்டதால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் அவமானமாக இருந்தது. அந்த பதிவுகளுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் விஜய் மறைமுகமாக அதை ஆதரித்ததாகவே கூறப்படுகிறது.
சங்கீதாவின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், சினிமா தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று முன் தினம் திரிஷாவுடன் விஜய் திருமண நிகழ்ச்சிக்கு வந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தம்பி சுரேஷ் கல்பாத்தியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடந்தது.
ஒரே காரில் வந்த திரிஷா விஜய்
இதில், நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஜோடியாக வந்து இறங்கினார். சந்தன நிற பட்டு வேட்டி சட்டையை விஜய் அணிந்திருக்க, அதே நிறத்தில் திரிஷா சேலை கட்டி இருந்தார். இருவரும் ஜோடியாக வலம் வந்து மண மக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தது மேலும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில் தான் சங்கீதா தன்னை விஜய் வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவங்களால் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சூழலில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழிசை பேச்சு
தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- சங்கீதா விஷயத்தில் நான் எதுவும் தலையிட்டு பேசவில்லை. ஏன் என்றால் அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை. ஆனாலும் நாம் நாளைக்கு மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறோம். ஆக சங்கீதா அவர்களுக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் .
அவர் ரொம்ப சிரமத்தில் இருக்கிறார்.. ரொம்ப கஷ்டப்படுகிறார்.. ரொம்ப கொடுமைப்படுத்தப்படுகிறார் என்றெல்லாம் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.. யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது தான் நம் எல்லோரின் கவனமாகவும் இருக்க வேண்டும்.. என்று கூறினார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications