திமுகவிடம் 13, அதிமுகவிடம் 12, நாதகவிடம் 4.. விஜய்க்கு 34% வாக்குகள் கிடைத்தது எப்படி?
சென்னை: 2021 சட்டசபைத் தேர்தலை ஒப்பிடும் போது திமுக 13% வாக்குகளையும், அதிமுக 12% வாக்குகளையும் இழந்திருக்கிறது. இந்த 25 சதவிகித வாக்குகள் அப்படியே தவெக பக்கம் மடைமாறி இருக்கிறது. இதன் காரணமாகவே 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன. இந்த தேர்தலில் தவெக சுமார் 35% வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தவெக தொடங்கி வைத்திருக்கிறது.

எம்ஜிஆரின் சாதனையை தவெக தலைவர் விஜய் சமன் செய்துள்ளார். இதன் மூலமாக விஜய் சொன்னது போல் வரலாற்றை மீண்டும் அரங்கேற்றி இருக்கிறார். தவெக முதல் தேர்தலில் சுமார் 35% வாக்குகளை பெற்றதற்கு பெண்களும், இளைஞர்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அதேபோல் தவெக இந்த வாக்குகளை திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடம் இருந்தும் எடுத்துள்ளது.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியாக இணைந்து சுமார் 45.38% வாக்குகளை பெற்றிருந்தது. அதேபோல் அதிமுக கூட்டணியாக இணைந்து 39.71% வாக்குகளை பெற்றிருந்தது. அதேபோல் திமுக தனித்து 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றது. இந்த தேர்தலில் திமுக தனியாக 24.21% வாக்குகளையும், அதிமுக 21.36% வாக்குகளையும் பெற்றுள்ளது.'
இதன் மூலமாக கடந்த தேர்தலை ஒப்பிடும் போது திமுக சுமார் 13% வாக்குகளையும், அதிமுக 12% வாக்குகளையும் இழந்திருக்கிறது. இதன் மூலமாக திமுகவிடம் இருந்து தவெக அதிக வாக்குகளை கைப்பற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த 25% வாக்குகள், நாதகவின் 4% வாக்குகள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குகளின் தவெக கைப்பற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தவெகவின் அரசியல் வருகை பாஜக, விசிக, பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது. விசிக கடந்த முறை 4 தொகுதிகளில் வென்ற நிலையில், இந்த முறை 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பாமக 17 தொகுதிகளில் போட்டியிட்டு 5ல் மட்டுமே முன்னிலையில் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications