திமுக 1.. அதிமுக 2.. யார் வாக்குகளை விஜய் அதிகம் எடுக்கிறார்? பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவிடம் இருந்து 1 வாக்குகளையும், அதிமுகவிடம் இருந்து 2 வாக்குகளையும் விஜய்யின் தவெக பிரிப்பதாக பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை என்டிஏ கூட்டணிக்கு பிரச்சனையாக அமைந்துள்ளதாக கூறிய அரவிந்த் குணசேகர், அதனை எக்ஸிட் போல் முடிவுகளும் உறுதி செய்வதாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 85.15% வாக்குகள் பதிவாகிய நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெக 98 இடங்கள் முதல் 120 இடங்கள் வரை வெல்லும் என்று கூறி இருக்கிறது.

Vijay

திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை வெல்லும் என்றும், அதிமுக 22 முதல் 32 இடங்கள் வரை மட்டுமே வெல்லும் என்று தெரிவித்திருக்கிறது.
திமுக மற்றும் தவெகவின் வாக்கு சதவிகிதம் 35ஆக இருக்கும் என்றும் Axis My India கூறி இருக்கிறது. ஆனால் விஜய் குறைந்தது 70 சீட்கள் வரை வெல்வார் என்றும் Axis My India பிரதீப் குப்தா உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரபல பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் பேசுகையில், Axis My India நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் மட்டும் எவ்வளவு பேரிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 75 ஆயிரம் பூத்கள் இருக்கின்றன. அதில் பாதி பூத்களுக்கு கூட Axis My India செல்லவில்லை என்று புரிந்து கொள்கிறேன்.

இந்த எக்ஸிட் போல் முடிவுகள் மே 4ஆம் தேதி எந்தப் பாதையில் முடிவுகள் செல்லும் என்பதை காட்டுவதாக நினைக்கிறேன். அதேபோல் 2021ல் Axis My India நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக மற்றும் அதிமுக இடையில் 5%க்கும் குறைவான வித்தியாசம் மட்டுமே இருந்தது. திமுக 43% வாக்குகளையும், அதிமுக 38% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இம்முறை திமுக 35% வாக்குகளையும், அதிமுக 22% வாக்குகளையும் மட்டுமே பெறும் என்று கூறி இருக்கிறது. திமுகவிடம் இருந்து 8% வாக்குகளை பெறும் தவெக, அதிமுகவிடம் இருந்து 16% வாக்குகளை கைப்பற்றுகிறது. அதாவது திமுகவிடம் இருந்து 1 ஓட்டை தவெக பெற்றால், அதிமுகவிடம் இருந்து 2 ஓட்டுகளை தவெக கைப்பற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+