“பாண்டியம்மா சிஸ்டர்”.. விஜய் டிராக்டர் ஓட்டிய வீடியோவை வைத்து பங்கம் செய்த அதிமுக ஐடி விங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வைத்தே இறங்கி அடித்துள்ளது அதிமுக ஐடி விங்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் 6ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vijay Drives Tractor During Maduranthakam Bypoll Campaign AIADMK IT Wing Mocks Viral Video

அந்த வகையில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகத குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் சுமார் 45 கி.மீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார்.

மதுராந்தகம் தொகுதியில் உள்ள சுமார் 35 கிராமங்களுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முதல்வர் விஜய். இந்த ரோடு ஷோவில், திடீரென ஒரு டீக்கடைக்குள் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு டீ அருந்தியபடி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் ஏறி மீண்டும் ரோடு ஷோ சென்ற விஜய், திடீரென ஒரு வயல் வெளியில் இறங்கி, அங்கு பணி செய்திருந்த ஒரு பெண்ணிடம் வாக்கு சேகரித்தார்.

யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வயல் வெளியில் இருந்த டிராக்டரில் ஏறி, அதனை இயக்கி வாக்குச் சேகரித்தார். முதல்வர் விஜய், வயலில் டிராக்டர் ஓட்டிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வைத்தே இறங்கி அடித்துள்ளது அதிமுக ஐடி விங். அதிமுக ஐடி விங், முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டும் வீடியோவை பகிர்ந்து, "ஓஹ்ஹ்... டிராக்டர் ஓட்டுற Scene-ஆ ப்ரோ.. Rehearsal ஒழுங்கா பண்ணலையோ... இவ்ளோ தடுமாறுது..! இடைத்தேர்தல் தோல்வி பயம் படுத்தும் பாடு!" என விமர்சித்துள்ளது.

டிரைவிங் ஸ்கூல் வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வைரலாகப் பரவியது. அதில் பேசும் பெண்மணி, இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ளும் பாண்டியம்மாள் என்ற பெண்ணை பாராட்டிக் கொண்டிருப்பார். "சைக்கிள் பேலன்ஸே இல்லாத பாண்டியம்மா சூப்பரா ஓட்டுறாங்க.. வாழ்த்துகள் பாண்டியம்மா சிஸ்டர்" எனப் பேசுவார். அடுத்த நொடியே அந்த பாண்டியம்மாள் கீழே விழுந்துவிடுவார். அந்த ஆடியோவுடன் விஜய் வீடியோவை பகிர்ந்து கலாய்த்துள்ளது அதிமுக ஐடி விங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+