தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள்
சென்னை: அரசியல் தலைவர்களின் சூறாவளி பிரசாரத்தால் தமிழக அரசியல் களம் சூடுபறக்கும் நிலையில் ஒரு புறம் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யின் தவெக கட்சி சின்னமான விசில் விற்பனையும் அனல்பறக்க நடந்து வருகிறதாம். ஒரு புறம் ஐபிஎல் தொடங்கியிருக்கும் நிலையில் விஜய்யின் தவெகவினர் விசில்களை அதிகம் வாங்குவதாலும் வழக்கத்தைவிட 60 சதவீதம் விசில் விற்பனை அதிகரித்துள்ளதாம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் தான் இருக்கிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளும் அனல் பறக்க பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் பிரசாரம் என்றாலே சில கட்சியினர் சற்று வித்தியாசமாக சிந்திப்பார்கள். ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்பது போல ஏதாவது புதுமையை செய்து மக்களை கவர வேண்டும் என கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தவெகவுக்கு விசில் சின்னம்
வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கினால், கிராமப்புறங்களில் எல்லாம் சின்னங்கள் வண்ண பெயிண்டுகளால் வரையப்படும். இதேபோன்று வாக்கு சேகரித்து செல்பவர்களும் தங்கள் சின்னங்களை வாக்காளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக அதனை அட்டையில் வரைந்து கையில் கொண்டு சென்றும், துண்டு பிரச்சுரம் கொடுத்தும் தெரியப்படுத்துவார்கள்.
இதனால் மக்களுக்கு அதிகம் பரீட்சையப்படும் சின்னங்களையே வேட்பாளர்கள் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிறது. தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியான சில மணி நேரங்களிலேயே மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெகவினர் ஈடுபட்டனர்.
60 சதவீதம் அதிகரிப்பு
இந்த நிலையில் விஜய் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு விசில் விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் மேட்ச் என்பதால் விற்பனை வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும் ஆனால் இந்த ஆண்டு தேர்தல் என்பதால் வழக்கத்தை விட 60 சதவீதம் விசில் விற்பனை அதிகரித்துள்ளதாக சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வரும் மகிந்திராசிங் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக பெருங்கூட்டங்கள், மக்களை கவரும் நிகழ்ச்சிகளில் விசில் சத்தம் ஒலிப்பது வழக்கம். அப்போது அந்த சத்தம் மிகப்பெரிய அளவில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தியதில்லை. ஆனால் எப்போது விசிலை ஒரு சின்னமாக த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதோ அப்போதே விசில் சத்தம் தேர்தல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மற்ற கட்சிகளெல்லாம் தங்கள் பிரசாரத்தில் விசில் சத்தம் எழுப்புவதையே விரும்புவதில்லை.
விசில் விலை உயர்வு
அதே நேரத்தில் தவெகவினர் அதிகளவில் விசிலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தவெக கூட்டங்களில் எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் பிளக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் விசில் பேசு பொருளாக மாறிவிட்டதால் விசில் தயாரிப்பவர்கள், விற்பனையாளர்கள் மத்தியிலும் விற்பனை கொடிகட்டி பறப்பதால் அவர்களும் சந்தோசத்தில் விசில் ஊதுகிறார்கள். தினமும் 30 ஆயிரம் விசில்களை தயாரித்து நாடு முழுவதும் சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வரும் மகிந்திராசிங் இது பற்றி கூறியதாவது:-
அனைத்து நிறங்களிலும் விசில்கள் விற்கப்பட்டாலும் த.வெ.க.வின் சிவப்பு, மஞ்சள் கலரில் உள்ள விசில்கள் விற்பனை அதிகமாக உள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் நடக்கும் போர் காரணமாக பிளாஸ்டிக் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று கூறினார். இதேபோல் சென்னை பாரிமுனை கடைகளில் விசில் விற்பனை அமோகமாக நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய் -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
அன்று சிரஞ்சீவி.. இன்று விஜய்.. இத்தனை ஒற்றுமைகளா? ரிசல்ட் எப்படி இருக்கும்? -
விஜய் அரசியல் என்ட்ரி.. சாதிய கட்சிகளுக்கு வீழ்ச்சியா? -
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
இனிகோவுக்கு WFH தெரியாது.. உங்க வீட்டுக்கே வருவாரு.. விஜய் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார்













Click it and Unblock the Notifications