அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. யாரும் சேராதீங்க.. விஜய் அதிரடி அறிக்கை!
சென்னை: என் தந்தை அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின,
அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.

விஜய் பிஆர்ஓ மறுப்பு
இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தி பொய் என்று திட்டவட்டமாக மறுத்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். அதேநேரம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி இயக்கத்திற்கு விண்ணபிக்கப்பட்டிருப்பது உண்மை என்றே டெல்லி தரப்பு ஊடகவியலாளர்கள் சொன்னார்கள்.

விஜயின் அரசியல் கட்சி அல்ல
இது தொடர்பாக விளக்கம் அளித்த விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அளித்த விளக்கத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று கூறினார்.

விஜய் விளக்கம்
இதனிடையே அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணைந்து பணியாற்ற வேண்டாம்
இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் புகைப்படம் கூடாது
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா?












Click it and Unblock the Notifications