Ctrl காங் + Alt விசிக + Del கம்யூனிஸ்ட்! குடைச்சல் கொடுத்த கூட்டணி! மொத்தமாய் அதிமுகவை அள்ளும் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் தயவோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய். இந்த நிலையில் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவது, பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என காங்கிரஸ் பேசி இருப்பது விஜய் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மாற்று கூட்டணி வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார் விஜய் என்கின்றனர். குறிப்பாக அதிமுகவை ஒட்டுமொத்தமாய் தமிழக வெற்றிக்கழக தரப்புக்கு ஆதரவு தர வைக்கும் வகையில் வேலைகள் தொடங்கி இருப்பதாக சொல்கின்றனர்.

Vijay TVK AIADMK

தமிழக அரசியலில் '2026' மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் தமிழக வெற்றிக்கழகத்தின் எழுச்சி. திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆளுங்கட்சியாக பொறுப்பு ஏற்று இருக்கிறது. எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருந்த அதிமுகவும் திமுகவும் இன்று எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றாக அமர்ந்துள்ளன.

விஜய்

இதுதான் தமிழக அரசியலில் புதிய அத்யாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஆட்சியை இழந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆளுங் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது, ஆலோசனை வழங்குவது என திமுக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் ஆட்சி கவிழும், ஆறு மாதத்தில் தேர்தல் என்பது போன்ற சில கருத்துக்கள் மட்டுமே திமுகவுக்கு எதிர்மறை விமர்சனங்களை பெற்று தந்திருக்கிறது.

கூட்டணி அரசியல்

மேலும் புதிய அரசு செயல்பட குறைந்தபட்ச கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ், விடுதலை, சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மிகப் பெரும் கூட்டணி பலத்துடன் இருந்த கூட்டணி உடைந்திருக்கிறது. விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தவெக பக்கம் சாய்ந்து விட்டன.

தமிழக வெற்றிக் கழகம்

108 தொகுதிகளில் மட்டுமே வென்ற தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

கம்யூனிஸ்ட்கள்

இதை அடுத்து தற்போதைக்கு பிரச்சனை இல்லாமல் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் போராட்டம், சட்டம் ஒழுங்கு, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்களை காட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. இதை அடுத்து மாற்று கூட்டணி வாய்ப்புகளை விஜய் ஆராய்ந்து வருகிறார் என்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள்

கூட்டணியில் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஓரளவு கூட்டணி தர்மத்தை கடைபிடித்து விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டுகள் எதற்கெடுத்தாலும் விமர்சனக் கணைகளை தொடுப்பதை விஜய் தரப்பு விரும்பவில்லை. அது மட்டும் அல்லாமல் பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவிலிருந்து விலகக்கூட தயார் என காங்கிரசின் ராஜேஷ்குமார் பேசியிருப்பது விஜய் தரப்பை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது என்கின்றனர்.

மாற்று கூட்டணி

இது ஒரு புறம் இருக்க மாற்று கூட்டணி வாய்ப்புகளை விஜய் ஆராய்ந்து வருகிறார் என்கின்றனர் தவெகவினர். ஏற்கனவே விருப்பப் பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் நிலையில் தேவைப்பட்டால் அந்த கட்சி கூட்டணிக்க் வரும் என்கின்றனர். அதே நேரத்தில் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அதிமுக தான் விஜயின் முக்கிய விருப்பமாக இருக்கிறதாம்.

எடப்பாடி பழனிசாமி

3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் தமிழக வெற்றிக்காக தரப்புக்கு அதிமுகவினர் ஆதரவு தர முடியும். எனவே அதற்கான வேலைகளை செய்யுமாறு அதிமுகவின் மூத்த தலைவர்களிடம் பேச விஜய் தரப்பில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பேசி வருகிறார்கள் என்கின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் குதித்திருக்கும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விரைவில் கூட்டணியை இறுதி செய்ய விஜய் தரப்பு திட்டமிட்டு இருக்கிறது என்றும் சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+