108 விஜய்.. 118ல் காத்திருக்கும் கோட்டை! லாப நட்ட கணக்கு போடும் கட்சிகள்! எதிர்பாரா மேஜிக் நடக்குமா?
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது "118" என்ற மேஜிக் எண்ணைச் சுற்றியே சுழன்று வருகிறது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க வேண்டிய குறைந்தபட்ச பெரும்பான்மை இதுதான். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால், மீதமுள்ள 10 முதல் 11 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது எப்படி என்பது தான் முக்கிய அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் முழு தீவிரத்துடன் இறங்கியுள்ளார் விஜய்.

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், பெரும்பான்மை பெற இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.
இந்த குறையை ஈடு செய்யும் வகையில் தவெக கட்சி தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து பல கட்சிகள் தங்களது 'தேவையை' வைத்து முடிவு எடுக்கத் தொடங்கியுள்ளன. முதலில் பார்க்க வேண்டியது, காங்கிரஸ். இந்தக் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அரசியல் வட்டார தகவல்படி, விஜய்க்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் மனதளவில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு, அமைச்சரவை வாய்ப்பு போன்ற காரணிகள் இதற்குப் பின்னணியாக பேசப்படுகின்றன.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடும் முக்கியமானதாக உள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளிப்படையாகவே "விஜய் எங்களுக்கு எதிரி அல்ல" என்று கூறியிருப்பது, இந்த அணுகுமுறைக்கு சிக்னலாக பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் ஆதரவு அளிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் சேரலாம் என்ற கணிப்பும் உள்ளது. இவை அனைத்தும் இணைந்தால், விஜய்க்கு தேவையான எண்ணிக்கை பெரும்பாலும் எட்டக்கூடியதாக மாறும். ஆனால் அரசியல் கணக்கு இங்கேயே முடியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி நிலைப்பாடு மிகவும் சிக்கலானது. வடதமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி கொண்ட இந்தக் கட்சி, தற்போதைய கூட்டணியை விட்டு வெளியே வந்து விஜய்க்கு ஆதரவளிக்குமா என்பது பெரிய கேள்வி. அமைச்சரவை இடம் போன்ற காரணிகள் இருந்தாலும், மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் உள்ள முரண்பாடுகள் தடையாக இருக்கலாம்.
அதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளின் ஆதரவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவர்களின் ஆதரவு எண் குறைவாக இருந்தாலும், பெரும்பான்மை கணக்கில் தீர்மானிப்பானதாக மாறும். முக்கியமாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன முடிவு எடுக்கும் என்பது அரசியல் திசையை மாற்றக்கூடிய அம்சமாக உள்ளது. திமுக எதிர்ப்பு என்ற ஒரே கோணத்தில் பார்த்தால் ஆதரவு தரலாம். ஆனால் அப்படி செய்தால், எதிர்காலத்தில் தானே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதால், அதிமுக இந்த முடிவில் மிகவும் கவனமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மறுபக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை விஜய்க்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு இல்லை என்றே அரசியல் வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன. காரணம், தேர்தல் முழுவதும் விஜய் இந்த இரு கட்சிகளையும் நேரடியாக எதிர்த்ததே ஆகும்.
இந்த அனைத்து கணக்குகளையும் பார்த்தால், 118 என்ற 'மேஜிக் எண்' எட்டுவது எளிதானது அல்ல. அதே நேரத்தில், சாத்தியமற்றதுமில்லை. பல சிறிய கட்சிகளின் ஆதரவை ஒருங்கிணைத்தால், அந்த எண்ணிக்கையை எட்ட முடியும். ஆனால் அது ஒரு நிலையான ஆட்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது. கூட்டணிக் கட்சிகளை நம்பிய 'மைனாரிட்டி அரசு' என்ற நிலை உருவானால், ஒவ்வொரு முடிவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.
இருப்பினும், விஜய் தலைமையிலான அரசியல் எழுச்சி இந்தத் தேர்தலில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. அதை மறுக்க முடியாத நிலையில், பல கட்சிகளும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. மொத்தத்தில், "118" என்பது ஒரு எண் மட்டுமல்ல; தமிழக அரசியலின் அடுத்த அதிகார மையத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். அதை எட்ட விஜய் எப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்குகிறார் என்பது தான் முக்கியம்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications