சில்மிஷம்..ஆபிசில் ‘அந்த’ பொருள்.. தவெக விஜயின் ’விர்ச்சுவல் வாரியர்’ விஷ்ணுவை புரட்டியெடுத்த அண்ணன்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தன் கட்சி தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை விர்ச்சுவல் வாரியர் என பாராட்டி இருந்தார். அவர் பேசி முழுதாக 3 நாட்கள் கூட ஆகவில்லை. இந்த நிலையில் சென்னையில் விஜயின் ஆதரவாளர் என பிற நடிகர்களின் ரசிகர்களை வம்பு இழுத்து வந்த விஷ்ணு என்பவரை புரட்டி எடுத்திருக்கின்றனர் சில இளைஞர்கள். இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண்ணின் அண்ணனும் அவரது நண்பர்களும் விஷ்ணுவை காதோடு அப்பிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் அவரது அலுவலகத்தில் இருந்து ஆணுறை பாக்கெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து தீவிர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அவரது நடவடிக்கைகள் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வீடியோ மூலம் பேசிய விஜய் தனது கட்சியின் தொண்டர்களை விர்ச்சுவல் வாரியர்ஸ் என பாராட்டி இருந்தார்.

அப்படி ஒரு விருச்சுவல் வாரியர் தான் விஷ்ணு. சென்னையை சேர்ந்த இவர் தனது யூட்யூப் சேனலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நடிகர் விஜய்க்கும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார். மேலும் அஜித் ரசிகர்களையும், அரவிந்த்சாமி ரசிகர்களையும் வம்பு இழுப்பது இவரது வழக்கம். வேறு ஏதாவது அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் விஜய் குறித்து விமர்சித்தால் அவர்களை கடுமையாக பேசுவது தான் விஷ்ணுவின் வேலை. இந்த வேலைக்காகவே இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் விஷ்ணுவை சில இளைஞர்கள் சேர்ந்து புரட்டி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது நண்பனின் தங்கையிடம் விஷ்ணு பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண், தனது அண்ணனிடம் நடந்தது குறித்து தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து அங்கு சென்ற அந்த இளம் பெண்ணின் அண்ணனும் அவரது நண்பர்களும் விஷ்ணுவை அடித்து துவைத்து அமர வைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றனர்.
மேலும் அவரை தாக்கிய காட்சிகளும் அந்த வீடியோவில் வெளியாகியிருக்கிறது. அந்த தாக்குதலுக்கு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் விஷ்ணுவை தேடி சென்ற போது அவரது அலுவலகத்தில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்திருக்கிறது. ஒரு youtube சேனல் அலுவலகத்தில் ஆணுறைகள் எதற்கு என அதை காட்டியபடி அவர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே விஜய் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து கஞ்சா விற்பனை, பாலியல் தொல்லை உள்ளிட்ட வழக்குகளில் சிக்குவது அதிகரித்து வருகிறது. முன்னதாக பல நிர்வாகிகள் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி நிலையில் அவர்களுக்கு பதவி கொடுக்காமல் தப்பித்தார் விஜய். இந்த நிலையில் விஜய் ஆதரவாளர் என சமூக வலைதளங்களில் பொங்கிய ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications