யாருப்பா இவரு.. விஜய் வீட்டு முன்பாக அட்ராசிட்டி செய்த முரட்டு ரசிகர்! அதுலயும் அந்த ஸ்டெப் இருக்கே!
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கல்வி விருது வழங்கும் விழாவுக்கு நடிகர் விஜய் வருகை தருவதற்கு முன்னர், விஜய்யின் வீட்டு முன்பாக ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ஒரு ரசிகர் செய்த அட்ராசிட்டி வீடியோ தீயாகப் பரவி வருகிறது.
நடிகர் விஜய், சினிமா தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்தார்.

சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவியரை குடும்பத்துடன் மேடையேற்றி, சால்வை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக, விஜய்யின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் அவரது நீலாங்கரை வீட்டின் முன் குவிந்தனர். அப்போது வேகமாக அங்கு வந்த ஒரு ரசிகர் விஜய் வீட்டின் கேட்டின் முன்பு மண்டியிட்டு விழுந்து வணங்கினார். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்த்து கை எடுத்து கும்பிட்டார்.
அதைத்தொடர்ந்து, சிசிடிவி கேமரா முன்பாக மண்டியிட்டு வணங்கினார். மேலும், சமீபத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே...' பாடலில் வரும் ஸ்டெப்பை போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய்யின் காரின் பின்னால் ஏராளமான ரசிகர்கள் ஓடியபடி சென்றனர். காரை விட்டு இறங்கியதும் அவரை ரசிகர்கள் சூழ்ந்ததால் அவர் அங்கிருந்து தப்பி மேடைக்குச் செல்வதற்குள் பெரும் பாடுபட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் ரஜினிகாந்த், தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, ரஜினி ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி இன்றளவும் பிரசித்தம். ரஜினியை காணும் மகிழ்ச்சியில் திளைத்த ரஜினி ரசிகர்கள் மேடையிலேயே அவரைச் சுற்றி சுற்றி வந்தும், கொஞ்சியும் அலப்பறை செய்தனர். அதுபோன்று இன்று விஜய் ரசிகர், விஜய்யின் வீட்டு முன்பாக இருந்த சிசிடிவி கேமராவை வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்











Click it and Unblock the Notifications