"அந்த" 2 ரகசியங்கள்.. உங்களிடம் சொல்லணும்.. பேசலாமா.. விஜய்க்கு லெட்டர் போட்ட ரவிராஜா.. பரபரப்பு!
விஜய் மக்கள் மன்ற நிர்வாகி விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளார்
சென்னை: "உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த 2 விஷயங்களையும் சொல்லணும்.. மேலும் தெரியாத 2 விஷயங்களையும் ஆதாரத்துடன், சில போட்டோக்களையும் உங்களிடம் காட்ட வேண்டும்.. அது விஷயமாகத்தான் பேச வேண்டும்.. 5 நிமிஷம் பேச அனுமதி தாருங்கள்" என்று மன்ற பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ரவிராஜா விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.. இந்த கடிதம்தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம் வீட்டில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவி ராஜா, துணைச் செயலாளர் குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் எஸ்ஏசி-க்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.. எனவே 2 பேரையும் பொறுப்பில் இருந்து விஜய் நீக்கிவிட்டார்.. பிறகு அவர்களை தன் வீட்டில் இருந்தும் காலி செய்ய சொன்னார்.. ஆனால், அவர்கள் 2 பேரும் அந்த வீட்டில் இருந்து வெளியே மறுத்துள்ளனர்.. எனவே, விஜய் நேற்று விருகம்பாக்கம் போலீசில் புகார் தந்திருந்தார்.
இந்நிலையில், ரவிராஜா தரப்பில் சொல்லும்போது, "நானும் குமாரும் ரொம்ப வருஷமாகவே விஜய் நற்பணி மன்றத்தில் இருக்கிறோம்.. விஜய்யின் வளர்ச்சிக்காக இரவும் பகலும் பாடுபட்டுள்ளோம்... இந்த 23 வருஷங்களாக இந்த வீட்டில் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். அந்த வீட்டுக்கு வாடகையும் கிடையாது... அட்வான்சும் கிடையாது... எனது குடும்பம், பிள்ளைகள் படிப்புச்செலவு என எல்லா உதவிகளையும் விஜய்தான் செய்து வந்தார்.
விஜய் ரொம்ப நல்லவர்... ஆனால் விஜய்யின் மேலாளர் புஸ்சி ஆனந்த்தான் எங்களை பற்றி தவறான தகவல்களை விஜய்யிடம் தெரிவித்துள்ளார். விஜய் திடீரென எங்களை வீட்டை விட்டு காலி செய்ய சொல்வது அதிர்ச்சியாகவே இருக்கு.. திடீரென காலி செய்ய சொன்னால் நாங்க குடும்பத்துடன் எங்கே போவோம்?" என்று கூறினாராம்.
இதனிடையே, ரவி ராஜா விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி உள்ளாராம்.. அதில், "உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த 2 விஷயங்களையும் அவர்கிட்ட சொல்லணும்.. தெரியாத 2 விஷயங்களையும் ஆதாரத்துடன், சில போட்டோக்களுடன் காட்ட வேண்டும்.. அது விஷயமாகத்தான் பேச வேண்டும்.. 5 நிமிஷம் பேச அனுமதி தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.. 2 பேருக்கு மட்டுமே தெரிந்த போட்டோக்கள் என்றால், அது என்னவாக இருக்கும்? என்ற பரபரப்பு சூழ்ந்து கொண்டுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications