தவெக 2ஆவது மாநில மாநாடு.. டோல்கேட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்த விஜய் ரசிகர்கள்.. ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, மதுரைக்கு அருகே உள்ள பாரபத்தியில் இன்று கோலாகலமாக நடைபெறும் நிலையில் மாநாட்டிற்கு சென்ற பலர் டோல்கேட்டை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநாடு செல்லும் வழியில் இருக்கும் டோல்கேட்டில் நேற்று இரவு பணம் கட்டாமல் அதை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tamilaga Vetri Kazhagam vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அவனியாபுரம் விமான நிலையம் வழியாக தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகளும், "மக்கள் விரும்பும் முதல்வர்" என்ற பதாகைகளும் அணிவகுத்து நிற்கின்றன.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநாட்டுத் திடலின் பெரும்பகுதி பச்சை விரிப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மாநாட்டுத் திடல் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. தவெக தலைவர் விஜய், பார்வையாளர்களின் மத்தியில் "ராம்ப் வாக்" செல்லும் வகையில், 10 அடி உயரத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு, இரவு 7 மணி அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் மாநாடு

மாநாட்டு திடலின் முன்பாக 100 அடி உயரக் கம்பத்தில் விஜய் கொடியேற்றியதும், தமிழ்த்தாய் வாழ்த்து, கொள்கைப் பாடல், உறுதிமொழி மற்றும் தீர்மானங்கள் வாசிக்கப்படும். இறுதியாக, விஜய் சிறப்புரையாற்றுவார்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறை போன்ற குறைபாடுகள் இந்த மாநாட்டில் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன என நிர்வாகிகள் குறிப்பிட்டனர். மேடையின் இருபுறமும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள், அவசர கால ஆம்புலன்ஸ் செல்வதற்கான தனிப்பாதை மற்றும் 300-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது

மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான முரளிதரன் பேசுகையில், "இந்த மாநாட்டின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. கடந்த விக்கிரவாண்டி மாநாட்டில் இருந்த சில குறைகள் இங்கு முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளன. குடிநீர் வசதி மட்டுமல்லாமல், அவசர மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்தில் பேச்சுரிமை கூட மறுக்கப்படும் சூழலில், இந்த மாநாடு அனைத்து தடைகளையும் கடந்து, தவெக ஒரு பெரிய இயக்கம் என்பதை வெளிப்படுத்தும். தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் மாநாடாக இது அமையும்," என்று தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுப் பாதுகாப்புப் பணிகளில் 3,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களுடன், 2,000 தனியார் பாதுகாவலர்களும், 500 பெண் பாதுகாவலர்களும் பணியில் ஈடுபட உள்ளனர். மாநாட்டு மேடையின் முகப்பில் இரண்டு யானைகளின் சிற்பங்களும், நடுவே வாகை மலர் வடிவமும் இடம்பெற்றுள்ளன. மாநாட்டுத் திடலின் இருபுறமும் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் ஆகியோரின் பிரம்மாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநாட்டு முழக்கமான "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற வாசகம் மேடையின் இடதுபுறத்தில் பிரகாசமாக மின்னுகிறது. கடந்த மாநாட்டில் "ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு" என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய், இந்த மாநாட்டிலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவார் என தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+