பலத்தை காட்டுவோம்! கூலி படத்தை சீண்டிய TVK விஜய் விர்ச்சுவல் வாரியார்ஸ்! ரஜினி ரசிகர்கள் போட்ட சபதம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி (coolie) படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கூலி படத்திற்கு விமர்சனத்தை தாண்டி நடிகர் விஜய்யின் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களும் கடுமையான வன்மத்துடன் கூட விமர்சனங்களை வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் விஜய் ரசிகர்களுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் பலர் இணையத்தில் சபதம் எடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு வரும் 21ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடையானது 200 அடி நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும், மாநாட்டு திடலில் 800 அடி நீளத்திற்கு நடைபாதை வசதியும் செய்யப்படுகிறது. இம்மாநாட்டில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டர்களின் வசதிக்காக 30 இடங்களில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், 200 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும், ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளும் நிறுவப்பட்டு வருகின்றன. தொண்டர்கள் எளிதாக உள்ளே வந்து செல்ல சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழக மாநாடு - விஜய் திட்டம்
தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக நடத்தப்படும் மாநில மாநாட்டில் முக்கியமான சில அரசியல் தலைகளை, மாற்று கட்சியினரை மேடை ஏற்றலாமா அல்லது வேறு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாமா என்று விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த மாநாட்டிற்கு போய் அங்கே விஜய்க்கு எதிராக கோஷம் எழுப்பலாம், விஜய் பேச்சு சரியில்லை என்று பேட்டி கொடுக்கலாம் என்று ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டு உள்ளார்களாம். அதோடு தேர்தல் நேரத்தில் விஜய்க்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்யலாம் என்றும் திட்டமிட்டு உள்ளார்களாம். ரஜினி ரசிகர்களின் இந்த கோபத்திற்கு பின் காரணம் உள்ளது.
ரஜினி கூலி - விஜய் ரசிகர்கள் விமர்சனம்
கூலி திரைப்படம் 5 நாள் வசூல் 400 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், 'வார் 2' படத்துடன் மோதுகிறபோதிலும், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ரஜினியின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய ஆரம்ப வசூலை பதிவு செய்து உள்ளது. லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்த்தும் இணையும் இந்தப் படம், கோலிவுட் வரலாற்றிலேயே 'லியோ'வின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு சந்தையில் நாகார்ஜுனா, இந்தி சந்தையில் ஆமிர்கான், கன்னட சந்தையில் உபேந்திரா போன்றோரின் பங்களிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது படத்தின் மீதான வணிகரீதியான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், 'கூலி' படத்தின் தயாரிப்பு குழுவினர், நடிகர் தேர்வு விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர். தொடக்கத்தில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் தற்போது கடுமையான கிண்டல் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கூலி படம் விஜய் விமர்சனம்
இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். படம் பொதுமக்கள் இடையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் கூட விஜய் ரசிகர்கள் அதை கிண்டல் செய்யும் விதம் மோசமாக உள்ளது. முக்கியமாக லோகேஷ் - விஜய் காம்போவில் வந்த லியோ படம் இதை விட நன்றாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் பலரும் தியேட்டர் வாசலில் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அவர்களின் இந்த விமர்சனம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கே சிக்கலாக மாற தொடங்கி உள்ளது. கூலி படம் ஓடும் திரையரங்குகளுக்கு வெளியே பல விஜய் ரசிகர்கள் படம் குறித்து கடுமையாக நெகட்டிவ் விமர்சனங்களை வைக்கின்றன.
கூலி படம் குறித்து யூ டியூப் சேனல்களிடமும் தொலைகாட்சி அலைவரிசைகள் மற்றும் செய்தியாளர்களிடமும் மிக கடுமையான எதிர்மறை விமர்சனங்களை வைத்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூலி படம் மூலம் வரும் சிக்கல்
கூலி படம் குறித்து விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில், மீம்ஸ்கள், கிண்டலான பதிவுகள் மற்றும் கடுமையான விமர்சனங்களுடன் கேலி செய்வது அதிகரித்துள்ளது. இது அரசியல் நோக்கர்கள் மத்தியில் TVK-விற்கு எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கலாம் என்ற கருத்தை எழுப்பியுள்ளது.
ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் இன்றும் வலுவான மற்றும் விசுவாசமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரஜினி ரசிகர்கள் தாங்கள் தாக்கப்பட்டதாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர்ந்தால், தேர்தல்களில் விஜய்யின் கட்சிக்கு எதிராக வாக்களித்து பழிவாங்கலாம் என்று கூறப்படுகிறது. இதை ரஜினி ரசிகர்களே தியேட்டர் வாசல்களில் பேட்டிகளில் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் தவறாக விமர்சனம் செய்தால்.. அவர்களிடம் போய் இதுக்குத்தான் உங்க கட்சியை எவனும் கண்டுக்கல.. நாங்க உங்களுக்கு வாக்கு அளிக்கணுமா , வேண்டாமா என்று கேள்வி எழுப்புகின்றனர். இதன் காரணமாகவே இப்போது விஜய்க்கு எதிராக களமிறங்க ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.
விஜய் அரசியலுக்கு சிக்கல்
தமிழ் சினிமாவில், இத்தகைய ரசிகர் சண்டைகள் பொதுவானவை. ஆனால் விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இந்த சண்டைகள் அவருக்கு எதிராக திரும்பும். தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் எப்போதும் நெருங்கிய தொடர்புடையவை.
ரசிகர் மன்றங்கள் பெரும்பாலும் தேர்தல்களில் அரசியல் தன்னார்வக் குழுக்களாக செயல்படுகின்றன. அரசியல் முடிவுகளையும் தீர்மானிக்கின்றன. பொது மக்களின் கருத்துகள் விரைவாக மாறக்கூடியவை. சில TVK உறுப்பினர்கள், மற்ற ரசிகர் பட்டாளங்களுடனான தேவையற்ற சண்டைகள், குறிப்பாக ரஜினிகாந்த் போன்ற வலிமையான ரசிகர் பட்டாளத்துடன் போடும் சண்டைகள், விஜய்யின் அரசியல் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே அவரது இமேஜை சேதப்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.












Click it and Unblock the Notifications