சர்காருக்கு எதிராக அதிமுக பெரும் போராட்டம்.. ரசிகர்கள் ரியாக்சன் என்ன தெரியுமா?
சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுக கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
Recommended Video

சென்னை: சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுக கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இதை வைத்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.
இந்த காட்சிகள் ஆளும் கட்சி தரப்பை பெரிய அளவில் சீண்டி இருக்கிறது. இதனால் சர்கார் படத்திற்கு அதிமுக போராடி வருகிறது.
|
சர்கார் vs சர்கார்
இவர் ''அட பாவிகளா சர்கார் படத்துல அரசியல்வாதிகள எதிர்த்து மக்கள தான் போராட சொன்னாரு இப்போ அந்த சர்கார் படத்த எதிர்த்து அரசியல்வாதிகள் போராட்டம் பண்றாங்க கொடுமடா சாமி'' என்றுள்ளார்.
|
ஆமா பிரச்சனை
இவர் ''அதான் படத்துலையே ஒரு டைலாக் வருதே . கேள்வி கேட்ட பிரச்சனை வரும் அதுவும் முகத்துக்கு நேர கேட்ட கோவத்தோட பிரச்சனை வரும்'' என்றுள்ளார்.
|
மறுபடியும் வைரல்
இவர் ''எல்லா டிவி செய்திலையும் 'சர்கார்' டாப்பிக் தான் போய்ட்டு இருக்கு'' என்றுள்ளார் .
|
என்ன நடக்கிறது
இவர் ''ஆஹான்!!! கேள்விகேட்டா தீவிரவாதியாம், துப்பாக்கியால் சுட்டா மக்களின் பாதுகாப்பு கருதியாம்....நடக்கட்டும்..நடக்கட்டும்..'' என்று சட்ட அமைச்சர் சிவி சண்முகம் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
|
எல்லாம் ஒரு விளம்பரம்
இவர் ''சர்கார் படத்தின் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்ட அதிமுகவினருக்கு வாழ்த்துக்கள்'' என்றுள்ளார்.
|
உம்முன்னு கம்முன்னு ஜம்முன்னு
இவர் ''உம்முனு இருந்தவீங்கள உசுப்பு ஏத்திவிட்டு.....கம்முனு இருந்தவீங்கள கடுப்பு ஏத்திவிட்டு.... #தளபதி #சர்கார் ஜம்முனு ஓடிட்டு இருக்கு'' என்றுள்ளார்.
|
என்ன பயம்
இவர் ''இந்த சர்காருக்கு எதிரா படம் எடுத்ததால பயப்படுராங்கள. இல்ல இந்த சர்கார் படத்துல வர்ர மாதிரி சர்கார் உருவாகிடுமோன்னு பயப்படுராங்களா?'' என்றுள்ளார்.
|
வேறலெவல் பாஸ்
இவர் ''ஆளுங்கட்சியவே போராட விடுறதெல்லாம் வேறலெவல் சர்கார்'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications