"அரசியல் நடிகர்" சீமான்.. விஜய்யை சீண்டியதால் கொந்தளித்த ரசிகர்கள்.. மெகா போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு
சீமானுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்
சென்னை: விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் "ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல, இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது" என்று கூறியிருந்தார்.. ரஜினி, கமலை விமர்சிப்பதாக கூறி, சும்மா இருக்கும் விஜய்யை இழுத்து வைத்து பேசியதுதான், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம், சென்ற வருடம் சீமான் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "விஜய் என் தம்பி.. அவர் என் இனம் சார்ந்தவர்.. விஜய் வந்து அரசியல் செய்வதென்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்" பெருமிதத்துடன் கூறியிருந்தார்..

அப்போது என்றில்லை, எப்போது விஜய் பேச்சு எடுத்தாலும் என் தம்பி, என் தம்பி என்று வாய் நிறைய சொல்வார் சீமான்.. மேலும், விஜய்க்கு கத்தி, மெர்சல், சர்கார் போன்ற படங்களின்போது எழுந்த அரசியல் ரீதியான பிரச்சனைகளின்போதும் சீமான்தான் ஓடோடி வந்து ஆதரவு குரல் கொடுத்தவர்.
இவ்வளவையும் செய்துவிட்டு, இன்னைக்கு விஜய் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும்போது, அதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளதுதான் விஜய் ரசிகர்களுக்கு கொந்தளிப்பை தந்துள்ளது.. எனவே தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில் தேனி மாவட்ட மெகா போஸ்டர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.. "அரசியல் நடிகர் சீமான்" என்ற தலைப்பில், அரசியல் ஆதாயத்திற்காக நடிப்பதாக கூறி போஸ்டர் ஒட்டி உள்ளனர்... அத்துடன், விஜய் ரசிகர்கள், சீமான இதுவரை விஜய்யை பாராட்டி, புகழ்ந்து பேசிய வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.. அத்துடன், சீமான் மட்டும் என்ன, சினிமாவில் இருந்துதானே அரசியலுக்கு வந்தார்? விஜய்யிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications