கிரவுண்டில் நினைச்சதை விட.. பலம் அதிகமா இருக்கு.. இன்டர்னல் சர்வே.. தவெக விஜய்க்கு போன ரிப்போர்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு நினைத்ததை விட கிரவுண்டில் அதிக சப்போர்ட் இருப்பதாக சர்வே ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம். அந்த சர்வேயில் விஜய்க்கு ஆதரவாக நிறைய தகவல்கள் இடம்பெற்று உள்ளதாம்.
இது தவெக மூலம் எடுக்கப்பட்ட இன்டர்னல் சர்வே ஆகும். விஜயை குஷியில் ஆழ்த்தும் அளவிற்கு சர்வேயில் இடம்பெற்ற தகவல்கள் என்னென்ன.. அவருக்கு எங்கெல்லாம் ஆதரவு இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
1. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 30% வாக்குப்பங்கைப் பெறுவோம் என்றும், மக்கள் விஜய்யை முதல்வராக விரும்புகிறார்கள் எனவும் உட்கட்சி ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டுள்ளது. அதாவது அந்த கட்சி சார்பாக நடத்தப்பட்ட உட்கட்சி சர்வேயில் இந்த முடிவுகள் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
2. உட்கட்சி ஆய்வின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது.

3. 41,453 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தி.மு.க. 32.9% ஆதரவுடன் முன்னணி வகிக்க, தொடர்ந்து த.வெ.க. 31.7% மற்றும் அ.தி.மு.க. 27.3% ஆதரவை பெற்றன. 8.1% பேர் மற்ற கட்சிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
4. இந்த மதிப்பீட்டில், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு வலுவான கோட்டைகள் அடையாளம் காணப்பட்டன.
5. உட்கட்சி ஆய்வின் இருக்கை கணிப்பின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது. அதாவது தவெக ஆதரவு தரும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும்.
6. இது குறித்துப் த.வெ.க. வட்டாரங்கள் நம்மிடம் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் அதிக மக்களாதரவு பெற்ற கட்சி என்பதை மக்கள் அறிவர். நாங்கள் 30% மேல் வாக்குகள் பெறுவதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் திமுகவின் வாக்கு சதவிகிதம் சரியும். தி.மு.க.வின் வாக்கு சதவீதம் 21%ஐ தாண்டாது என்று நாங்கள் நம்புகிறோம்; ஜெயலலிதா இல்லாத கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 19.5% பெற்றது.. இனி அதற்கும் வாய்ப்பு இல்லை" என்கின்றனர்..
7. இந்த ரிப்போர்ட் காரணமாக விஜய் குஷியில் இருக்கிறாராம். நினைத்ததை விட நமக்கு கிரவுண்டில் சப்போர்ட் அதிகமாக உள்ளது என்று விஜய் நினைக்கிறாராம்.
8. அதே சமயம் ஆளும் திமுக ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தவெக குறித்த முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமற்ற கருத்து கணிப்பு என்று கூறப்படுகிறது. இந்த சர்வே தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டியுள்ளது. அதாவது அந்த கட்சிக்கு நகர்புறத்தில் உள்ளது போல கிராமப்புறத்தில் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்று இந்த சர்வேயில் கூறப்படுகிறது.
9. சர்வே முடிவுகளின்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் ஆதரவு உள்ளது. மாநகராட்சி மற்றும் நகர்ப்புற மையங்களில் கட்சிக்கு சுமார் 10 முதல் 15 சதவீதம் வாக்காளர் ஆதரவு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள்.. நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
10 ஆனால், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளதாக இந்த சர்வே கூறுகிறது. அங்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு 10 சதவீதத்திற்கும் குறைவாக












Click it and Unblock the Notifications