முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்.. ஈரோட்டில் திடீர் பரபரப்பு! என்ன சொன்னாரு பாருங்க
சென்னை: தவெக தலைவரும் முதல்வருமான விஜய் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே நேற்றைய தினம் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் இப்போது முதல்வராக இருக்கிறார். புதிய ஆட்சி என்பதால் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் விஜய் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ற விமர்சனமும் இருந்து கொண்டே இருக்கிறது. செய்தியாளர்களை சந்தித்து அரசின் செயல்பாடுகள், அரசியல் நிலவரம் குறித்து அவர் பேசுவதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழலில் தான் ஈரோட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விஜய் திடீரென செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நேற்றைய தினம் அரசு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
இதில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது வெளியே வந்த முதல்வர் விஜய்யிடம் செய்தியாளர்கள், "ஈரோட்டுக்கு வந்திருக்கீங்க.. பெரியார் மாவட்டத்துக்கு வந்தது எப்படி இருக்கு?" என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு புன்னகையுடன் பதிலளித்த விஜய், "சூப்பரா இருக்கு.." என்று ஒரே வரியில் கூறினார். அடுத்தடுத்த கேள்விகளை செய்தியாளர்கள் கேட்கும் முன்பு விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களின் கேள்விக்கு விஜய் நேரடியாக பதிலளித்துவிட்டதாக தவெகவினர் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
