பொன்முடி விடுதலை.. பின்வாங்கிய சென்னை பாஜக கவுன்சிலர்..சைவ, வைணவ சர்ச்சை வழக்கு ஓவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சைவ, வைணவ சமயங்கள் பற்றி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தொடர்ந்த வழக்கை அவரே திடீரென வாபஸ் பெற்றதால், இந்த வழக்கிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

ponmudi-releases-from-the-case-over-controversial-remarks-on-saiva-vaishnava-faits-after-bjp-counci

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி. முன்னாள் அமைச்சரான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார். குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதால் அமைச்சர் பதவியை இழந்ததோடு, தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பொன்முடி சிக்கிய சர்ச்சைகளில் மிகவும் முக்கியமானது சைவ, வைணவ சமயங்கள் பற்றிய அவரது கருத்துகள். சென்னை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 2025ம் ஆண்டில் நடந்த கூட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் பற்றி அவர் முகம் சுளிக்கும் வகையில் அருவருப்பான கருத்துகளை கூறினார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. திமுகவின் கனிமொழி எம்பி உள்பட சொந்த கட்சியினரே பொன்முடியின் கருத்தை விமர்சனம் செய்தனர். சென்னை மாநகராட்சியின் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் பொன்முடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''இந்து மதம் பற்றி பொன்முடி தவறாக பேசிவிட்டார். அவர் இந்து மதத்தை புண்படுத்திவிட்டார். இதனால் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்முடி மீது மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இது பொன்முடிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து பொன்முடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது. அதன்பிறகு பொன்முடி சார்பில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். அதோடு உமா ஆனந்தனிடமும் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் தான் பொன்முடிக்கு எதிரான வழக்கை திடீரென்று உமா ஆனந்தன் வாபஸ் பெற்றுள்ளார். பொன்முடி தனது பேச்சுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கோரியுள்ளார். பொன்முடியின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு வழக்கை திரும்ப பெற்று கொள்கிறேன் என்று உமா ஆனந்தன் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்மூலம் பொன்முடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+