சிபிஐ விசாரணைக்கு தனி விமானத்தில் டெல்லி போன விஜய்.. செலவு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக இன்று டெல்லியில் விஜய் ஆஜராகினார். இதற்காக சுமார் 5500 கிமீ தூரம் வரை நிற்காமல் செல்லும் தனி சொகுசு விமானத்தில் விஜய் சென்ற நிலையில் அந்த விமானத்திற்காக விஜய் எவ்வளவு செலவு செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் தவெக சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் குழந்தைகள் பெண்கள் என 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லி சென்ற விஜய்
இந்த கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையானது ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், விஜய் பிரசார வாகன கார் டிரைவர் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விஜய்க்கும் சம்மன் அனுப்பியது சிபிஐ. இதன்படி இன்று விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்றார்.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை
பின்னர் அங்கிருந்து காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் 6 ஆம் எண் நுழைவு வாயிலில் வந்து இறங்கிய விஜய்யை மத்திய விமான பாதுகாப்பு படையினர் விமானம் நிறுத்தப்பட்டு இருந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். விஜய்க்கு ஏற்கனவே 'ஒய்' பிரிவு பாதுகாப்பு இருக்கும் நிலையில் விமான நிலையத்திலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், இணை பொருளாளர் ஜெகதீஷ் பழனிசாமி, உதவியாளர் சி ராஜேந்திரன், விஷ்ணு ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நயீம் ஆகியோர் சென்றனர். விஜய் காலை 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகம் சென்றார். அங்கு வந்ததும் அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
தனி விமானத்திற்கான செலவு என்ன?
தொடர்ந்து மதியம் அவருக்கு சைவ உணவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் இன்று தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றார். தொலைதூரம் பயணிக்கக் கூடிய சொகுசு விமானத்தில் விஜய் சென்றார். இந்த தனி விமானத்திற்காக விஜய் எவ்வளவு செலவு செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் சென்ற தனி விமானமானது சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கக் கூடிய பிளை எஸ்பிஎஸ் என்ற விமான நிறுவனம் தான் இந்த விமானங்களை இயக்கி வருகிறது. எம்பரர் லெகசிஸ் 600 என்ற வகை விமானம் இது. அல்ட்ரா லக்சரி வகை விமானமான இந்த வகை விமானமானது சுமார் 41 ஆயிரம் அடி வரை பறக்கக் கூடியதாம்.
5,500 கிமீ வரை நிற்காமல் பறக்கும்
மேலும் 5,500 கிமீ வரை எங்கும் நிற்காமல் செல்ல முடியுமாம். இந்த விமானத்தின் கட்டணம் என்பது ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுமாம். விஜய் தற்போது சென்றுள்ள இந்த விமானத்தின் கட்டணமானது சுமார் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
விமானம் பறந்து சென்ற நேரம் தவிர, திருப்பி ஒப்படைக்கும் வரை கட்டணமானது கணக்கிடப்படுமாம். இதன்படி பார்க்கையில் தான் விஜய்க்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல ரூ.20 லட்சம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தில் அகலமானது சுமார் 10 அடி கொண்டதாகும். இதில் மொத்தம் 13 பேர் அமர்ந்து செல்ல முடியுமாம்.












Click it and Unblock the Notifications