தவெக தேர்தல் அறிக்கை குழு அமைத்த விஜய்.. அருண்ராஜ் இன்.. செங்கோட்டையன் அவுட்
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. முதல் தேர்தல் ஒருபக்கம், கடைசி படமான ஜனநாயகன் வெளியீடு நெருக்கடி என்று விஜய் சவாலான காலத்தில் இருக்கிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளில் விருப்பமனு விநியோகம், நேர்காணல் ஆகியவை தொடங்கிவிட்டன. திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தவெக சார்பிலும் 12 நிர்வாகிகள் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை விஜய் அறிவித்துள்ளார். ஆனால் இந்தக் குழுவில் தவெக சீனியர் நிர்வாகி செங்கோட்டையன் இடம்பெறவில்லை.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. நடிகர் விஜய்யின் தவெக கட்சி தீவிர திமுக எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. அவரின் கடைசி படமான ஜனநாயகன் படம் வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியிலும் தேர்தல் பணிக்காக அவர் அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

தவெக தேர்தல் அறிக்கை குழு
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள். இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.
12 நிர்வாகிகள்
அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் அறிக்கைக் குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் என்கிற விவரத்தையுயும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இதற்கான குழுவில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், ஜே.சி.டி பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம், விஜய் பரணி பாலாஜி, முகமது பர்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, வழக்கறிஞர் சத்யகுமார் ஆகிய 12 பேர் இடம்பெற்றுள்ளனர். "மேற்கண்ட குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜய் கூறியுள்ளார்.
செங்கோட்டையன் இல்லை
விரைவில் இந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்னர். குழுவில் சமீபத்தில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் அனுபவம் பெற்ற செங்கோட்டையன் இடம்பெறவில்லை. அதேபோல தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications